ஜூரோங் ஈஸ்ட் அருகே உள்ள பெஞ்சுரு பகுதியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பாரந்தூக்கி ஒன்று விழுந்தது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் ஒருவர் எடுத்து அனுப்பிவைத்த படங்கள், வெள்ளை, சிவப்பு நிற பாரந்தூக்கி ஒன்று விழுந்து கிடப்பதைக் காட்டின. அதைச் சுற்றி உலோக, மரச் சிதைவுகள் காணப்பட்டன. சம்பவ இடத்தில் ஊழியர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தனக்குத் தகவல் அளிக்கப்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துரைக்க மனிதவள அமைச்சை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.


