குறைந்த வருமான குடும்பங்கள் சொந்தமாக வீடுகள் வாங்க உதவ புதுத்தொடக்க வீட்டுத் திட்டம் மேம்படுத்தப்படும். 16 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் ஈரறை வீடு வாங்க இந்தத் திட்டம் உதவுகிறது.
இளம் வயது உள்ள குடும்பங்களுக்கு உதவும் கிட்ஸ்டார்ட் திட்டம் நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தில், வீட்டிலும் சமூகத்திலும் பாலர்பள்ளிகளிலும் பிள்ளைகளின் வளர்ச்சியில் உதவுவதற்கு பெற்றோரும் பராமரிப்பாளர்களும் வழிகாட்டுதல் பெறுகின்றனர்.
2023ஆம் ஆண்டுக்குள் 5,000 பிள்ளைகள் இந்தத் திட்டம் வழி பயனடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


