2030க்குள் அரசாங்கச் செலவினத்தில் பெரும்பங்கு சுகாதாரப் பராமரப்புக்குச் செல்லும்

2030க்குள் அரசாங்கச் செலவினத்தில் பெரும்பங்கு சுகாதாரப் பராமரப்புக்குச் செல்லும்

2 mins read
127abc4d-1b05-4fcc-a7ba-5a6ba96d748e
சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைவதால் 2030ஆம் ஆண்டுக்குள் அரசாங்க செலவினங்களில் பெரும்பகுதி சுகாதாரப் பராமரிப்புக்குச் செல்லும். நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) அன்று தமது வரவுசெலவுத் திட்ட உரையில் இதைக் குறிப்பிட்டார்.  -

சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைவதால் 2030ஆம் ஆண்டுக்குள் அரசாங்க செலவினங்களில் பெரும்பகுதி சுகாதாரப் பராமரிப்புக்குச் செல்லும்.

நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) அன்று தமது வரவுசெலவுத் திட்ட உரையில் இதைக் குறிப்பிட்டார்.

கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பான செலவினங்களை ஒதுக்கிவிட்டு தற்போதைய விகிதப்படி சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் உயர்ந்துகொண்டு போனால், 2030ஆம் சுகாதாராப் பராமரிப்புக்கு மட்டும் சிங்கப்பூர் $27 பில்லியனைச் செலவிடும் என்று அவர் கூறினார்.

அதாவது 2030ஆம் ஆண்டுவாக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 3.5 விழுக்காட்டை நாம் மருத்துவச் செலவுகளுக்கு ஒதுக்க வேண்டி வரும் என்று நிதி அமைச்சர் சொன்னார்.

உலகளவில் அதிகமாக மூப்படையும் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

கடந்த ஆண்டு, 65 வயது அதற்கு மேற்பட்ட வயதுள்ள மூத்த குடிமக்கள் சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகையில் 16 விழுக்காட்டை வகித்தனர்.

2010ஆம் ஆண்டில் இந்த விகிதம் 9 விழுக்காடு.

2030ஆம் ஆண்டுவாக்கில் இது 25 விழுக்காடாக உயரும் சாத்தியம் உள்ளது.

அதாவது நான்கில் ஒரு சிங்கப்பூரர் மூத்தவராக இருப்பார்.

இது ஜப்பான், சில ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் நிலவரத்தைப் போன்றது என்று திரு வோங் விளக்கினார்.

வேலை செய்யும் வயதில் உள்ளவர்களின் எண்ணிக்கையை இது குறைக்கும்.

அத்துடன் பொருளியல், வேலைவாய்ப்பு தொடர்பான அபாயங்கள் இதனை மேலும் குறைக்கும் நிலை உள்ளதாக திரு வோங் குறிப்பிட்டார்.