செல்வந்தர்களுக்கு வருமான வரி கூடுகிறது

சிங்­கப்­பூ­ரின் செல்­வந்­தர்­கள் அதிக வரு­மான வரி, ஆடம்­பர சொத்­து­கள், சொகுசு கார்­க­ளுக்கு அதிக வரி செலுத்த வேண்­டும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செல்வ வரிகளை நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் இந்த ஆண்டுக் கான வரவுசெலவுத் திட்ட உரையில் நேற்று வெளியிட்டார்.

"சிங்கப்பூர் மேலும் சிறந்த முன்னேற்றம் அடைய இடமிருக்கிறது, அதனால் அதிகம் சம்பாதிப்பவர்கள் அதிகம் பங்களிக்க வேண்டும்" என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார். வரி அமைப்பில் செல்வ வரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் அவர்.

"செல்வ வரிகள், வருவாயை பெருக்குகின்றன. மேலும், செல்வ வளத்தின் ஒரு பகுதி நாட்டின் பொருளியலுக்கே மீண்டும் திரும்புகிறது. இது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க உதவுகிறது," என்றார் அமைச்சர்.

ஆக அதிக வரு­மா­னம் ஈட்­டு­வோர் தனி­ந­பர் வரு­மான வரி­யாக அதிகம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும். மதிப்­பீட்டு ஆண்டு 2024லிருந்து அவர்­க­ளுக்­கான வரு­மான வரி உயர்த்­தப்­படும்.

அதா­வது, 2023ஆம் ஆண்­டில் ஈட்­டப்­படும் வரு­மா­னத்­திற்கு வரி செலுத்தும் உள்ளூர்வாசிகளின் $500,000 முதல் $1 மில்லியன் வரையிலான வரிவிதிப்புக்குரிய வருமானத்திற்கு 23 விழுக்காடும் ஒரு மில்லியனுக்குமேல் ஈட்டும் வருமானத்திற்கு 24 விழுக்காடும் வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வரி மதிப்பீட்டிற்கு முந்திய ஆண்டில் குறைந்தது 183 நாள்களுக்கு இங்கு வசித்த வெளிநாட்டவர்களுக்கு இது பொருந்தும்.

இப்போதைக்கு $320,000மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 22% வருமான வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், $320,000 முதல் $500,000 வரையிலான வருமானத் திற்கு 22% வரிவிதிப்பு தொடரும்.

வருமான வரி செலுத்துவோரில் உச்சத்தில் இருக்கும் 1.2 விழுக் காட்டினர், இந்த வரிவிகித உயர்வால் பாதிக்கப்படுவர். இதன்மூலம் ஆண்டுக்குக் கூடுதல் வரி வருவாயாக $170 மில்லியன் அரசாங்கத்திற்குக் கிட்டும்.

"தனிநபர் வருமான வரியைப் பொறுத்தமட்டில், அதிக வருமானம் ஈட்டுவோர், அதிகமாகப் பங்களிக்க வேண்டும்," என்று வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் வரிவிதிப்பு முறையில் குறிப்பிடத்தக்க மேம்பாடு களை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கோடிகாட்டிய அமைச்சர், அது கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் என்றும் ஒரு நியாய மான வருவாய் முறைக்குப் பங்க ளிக்கும்.

அதாவது, ஒவ்வொருவரும் துடிப்பான பொருளியலுக்குப் பங்க ளிக்கவும் அதன்மூலம் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தவும் முடி கிறது. அதேநேரத்தில், அதிக வரு மானம் ஈட்டுவோர் அதிக பங்களிப்பை வழங்குவர் என்றார் திரு வோங்.

சிங்கப்பூர் கடைசியாக மதிப் பீட்டு ஆண்டு 2017ல் தனிநபர் வருமான வரிவிகிதத்தை உயர்த்தி யது. அப்போது, வரிவிகிதம் 20 விழுக்காட்டில் இருந்து 22 விழுக் காடாகக் கூட்டப்பட்டது.

உள்­ளூர்வாசி அல்­லா­தோர் வேலை­மூ­லம் ஈட்­டும் வரு­மா­னத்­திற்கு 15% அல்லது உள்­ளூர்­வா­சி­க­ளுக்­கான படிப்படி­யான வரி விகி­தங்­கள், இதில் எது அதி­கமோ அது விதிக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!