அதிக விலைமதிப்புள்ள வாகனங்களை வாங்குவோர் இனிமேல் கூடுதலாக வரி செலுத்த வேண் டும். திறந்த சந்தை மதிப்பில் (ஓஎம்வி) $80,000க்கு அதிகமான மதிப்புடைய வாகனங்களுக்கு, $80,000க்கும் அதிகமான மதிப்புத் தொகைக்கு கூடுதல் பதிவுக் கட்டணம் (ஏஆர்எஃப்) அறிமுகப்படுத்தப்படும்.
புதிய ஏஆர்எஃப் உயர்வு:
முதல் S$20,000 - 100%
அடுத்த S$30,000 - 140%
அடுத்த S$30,000 - 180%
S$80,000க்கு மேல் - 220%
இம்மாதம் இரண்டாவது வாகன உரிமைச் சான்றிதழ் ஏலத்தில் இருந்து பெறப்பட்ட உரிமைச் சான்றிதழுடன் சிஓஇ பதிவு செய்யப் படும் அனைத்து வாகனங்களுக்கும் புதிய கட்டணங்கள் பொருந்தும் என்று திரு வோங் கூறினார்.
கூடுதல் ஏஆர்எஃப், ஆண்டிற்கு $50 மில்லியன் வருவாயை அரசுக்கு ஈட்டித் தரும் என்றார் அவர்.

