தலைமுறை பேதம் மின்னிலக்கத் துறையில் இல்லவே இல்லை

தலைமுறை பேதம் மின்னிலக்கத் துறையில் இல்லவே இல்லை

2 mins read
2f0d18ab-503d-4621-8a74-37a5bbdc2a1c
திரு மனோகரன் முத்துவீரப்பன், 60. படம்: திமத்தி டேவிட் -

மின்­னி­லக்­கத் துறை­யில் சந்­தைப்­

ப­டுத்­தும் பணிக்­குப் புதி­தாக மாறிய மனோ­க­ரன் முத்துவீரப்­பன், 60, அத்­து­றை­யில் இளை­யர்­க­ளுக்கே முன்­னு­ரிமை தரப்­படும் என்

­ப­தில்லை எனக் கூறி­யுள்­ளார்.

வேலை­யி­டத்­தின் மீது வய­தில் மூத்­த­வர்­கள் கொண்­டுள்ள கடப்­பாட்­டை­யும் முதிர்ச்­சி­யான மனப்­போக்­கை­யும் முத­லா­ளி­கள் மதிக்­கி­றார்­கள் என்­பது இவ­ரது அனு­ப­வ­மாக உள்­ளது.

பத்­தாண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக சந்­தைப்­ப­டுத்­து­தல் அதி­கா­ரி­யாக இருந்த திரு மனோ­க­ரன், மின்­னி­லக்­கச் சந்­தைப்­ப­டுத்­து­த­லுக்­கான ஆறு மாதத் திறன் மேம்­பாட்டு வகுப்பை மேற்­கொண்டார்.

உரு­மாற்­றத் ­திட்­டத்­தின் வழி­யா­கத்­தான் தம்­மால் வேலை செய்­து­கொண்டே இதனை வெற்­றி­க­ர­மாக முடிக்க முடிந்­த­தாக அவர் கூறி­னார்.

வாரத்­திற்கு மூன்றுநாள் வகுப்பு, இரு­நாள் வேலை என்ற ஏற்­பாட்­டில் திரு மனோ­க­ரன், புதி­தா­கச் சேர்ந்த 'யூனி­சா­ஃப்ட் இன்­ஃபோ­டெக்' நிறு­வ­னத்­தின் ஆத­ர­வு­டன் மின்­னி­லக்க உத்­தி­க­ளைக் கற்­றுக்­கொண்­டார்.

"யூனி­போர்ஸ் என்ற கிளை நிறு­வத்­தின் தொழில்­நுட்­பக் கரு­வி­களை சொந்தத் தளத்­தின் மூலமா­க­ மா­க­வும் லஸாடா, ஷாப்பி போன்ற தளங்­க­ளின் மூல­மா­க­வும் விற்­பனை நடத்­தும் பணி­யைக் கற்­றுக்­கொண்­டேன்," என்றார் திரு மனோகரன். பொருள் விற்­பனை மட்­டு­மின்ற இணை­யத்­த­ளத்தை முறை­யாக பரா­ம­ரிப்­பதும் கட்­டணமுறை­க­ளைக் கையாள்­வ­தும் இவரது தற்போதைய முக்­கிய பொறுப்­பு­க­ளா­கும்.

இந்த வேலைக்கு முன்­ன­தாக 'லிஷா' என்ற லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள் மர­பு­ட­மைச் சங்­கம், 'சிக்கி' என்ற சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழில் சபை ஆகிய வற்றில் நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ள­ரா­கப் பணி­யாற்­றி­னார்.

2020ஆம் ஆண்டு கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் தொடங்­கி­ய­போது நிகழ்ச்சி ஏற்­பாட்­டுத் துறையே முடங்­கிப்­போ­னது. அந்­நே­ரத்­தில் துவண்­டு­போன திரு மனோ­க­ரன், எக்­கா­லத்­தி­லும் வலு­வான தேவை­யைக்கொண்ட ஒரு துறைக்கு மாற முடிவு செய்ய உறுதிகொண்­டார்.

நண்­ப­ரின் பரிந்­து­ரை­யால் தற்­போது வேலை பார்க்­கும் நிறு­வ­னத்­தில் 2020 செப்டம்பரில் சேர்ந்த திரு மனோ­க­ரன், இந்­தத் திறன் மேம்­பாட்டு வகுப்­பில் சேர அந்த நிறு­வ­னமே ஊக்­கம் தந்­த­தா­கக் கூறி­னர். வகுப்­பி­லுள்ள சக மாண­வர்­கள் ஏறத்­தாழ 30 வய­தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்த னர். ஆனா­லும் அனை­வ­ரும் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் உதவி செய்து கற்­ற­தாக அவர் கூறி­னார். வர்த்­த­கங்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் மின்­னி­லக்­கத் திறன்­களை வளர்க்­கும் திட்­டங்­களை மேம்­ப­டுத்த அடுத்த சில ஆண்­டு­ க­ளுக்­குக் கூடு­த­லாக 200 மில்­லி­யன் வெள்ளி ஒதுக்­கப்­படும் என்று நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று தமது வர­வு­செ­ல­வுத் திட்ட உரை­யில் அறி­வித்­தார்.

மின்­னி­லக்­கத் திறன்­க­ளுக்கு வர்த்­த­கங்­கள் கொடுக்­கும் மதிப்பை அர­சாங்க முடிவு பிர­தி­ப­லிப்­ப­தா­கக் கூறும் திரு மனோ­க­ரன், இத­னைப் பயன்­ப­டுத்­தும்­படி மக்­க­ளைக் கேட்­டுக்­கொள்ள விரும்­பு­கி­றார்.