$500 மி. நிதி உதவி

$500 மி. நிதி உதவி

2 mins read
59b29f44-9759-4c7a-8307-1ff7b57c2ca7
கொவிட்-19 பாதிப்பைச் சமாளிக்க சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் வகையில் உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு

கொவிட்-19 சவால்­க­ளைச் சமா­ளிக்­கத் திண­றும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­குக் கைகொ­டுக்க, 500 மில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான வேலை, தொழில் ஆதரவுத் தொகுப்புத் திட்டம் 2022ஆம் ஆண்டுக்கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தகு­தி­பெ­றும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, உள்­ளூர் ஊழி­யர் ஒரு­வ­ருக்கு ஆயி­ரம் வெள்ளி என்ற அடிப்­ப­டை­யில் அதி­க­பட்­சம் பத்­தா­யி­ரம் வெள்ளி வழங்­கப்­படும்.

உணவு-பானம், சில்­லறை விற்­பனை, நிகழ்­கலை, விளை­யாட்டு வச­தி­கள், திரை­ய­ரங்­கு­கள், வர­லாற்­றுத் தலங்­கள், உள்­ள­ரங்க விளை­யாட்டு வச­தி­கள், குடும்­ப கேளிக்கை நிலை­யங்­கள் உள்­ளிட்­டவை அதற்­குத் தகு­தி­பெ­றும்.

சுற்­றுப்­ப­ய­ணம், மாநாடு மற்­றும் கண்­காட்சி ஏற்­பாடு போன்ற துறை­க­ளைச் சார்ந்த நிறு­வ­னங்­ க­ளுக்­கும் அது பொருந்­தும்.

சென்ற டிசம்­பர் 31ஆம் தேதி நில­வ­ரப்­படி, தகுதி பெறும் நிறு­வ­னங்­க­ளின் வரு­டாந்­திர செய­லாக்க வரு­வாய் 100 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் குறை­வாக இருக்க வேண்­டும் அல்­லது 200க்கும் குறைந்த ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்தி இருக்க வேண்­டும்.

உள்­ளூர் ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­தாத உண­வங்­கா­டி­கள், காப்­பிக் கடை போன்­ற­வற்­றின் உரி­மை­யா­ளர்­க­ளுக்­கும் ஒரு­முறை மட்­டும் தரப்­படும் வழங்கு ­தொகை அளிக்­கப்­படும் என்று நிதி­ய­மைச்­சர் குறிப்­பிட்­டார்.

அர­சாங்­கம் இந்த ஆண்டு நிலை­யான மீட்­சியை எதிர்­பார்ப்­ப­தாக அவர் கூறி­னார்.

கிரு­மிப் பர­வல் காலத்­தில் வேலை இழந்த ஊழி­யர்­க­ளுக்­கான கொவிட்-19 மீட்சி மானி­யம் இந்த ஆண்டு இறு­தி­வரை நீட்­டிக்­கப் ­பட்­டி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

வேலை உருவாக்க ஊக்குவிப்புத் திட்டம் செப்­டம்­பர் மாதம் வரை நீட்­டிக்­கப்­படும். நீட்­டிப்பு பற்­றிய மேல் விவ­ரங்­கள் அமைச்­சு­க­ளின் செல­வி­னத் திட்ட விவா­தங்­களில் பகிர்ந்­து­கொள்­ளப்­படும் என்று அமைச்­சர் வோங் கூறினார்.

இத­னி­டையே, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­க­ம­ய­மாகி தொழில் நடை­மு­றையை தானி­யக்க­ம­ய­மாக்கி அவற்­றின் மூலம் உற்­பத்­தித் திற­னைப் பெருக்­கு­ வதற்கு உத­வும் வகை­யில் $600 மில்­லி­யன் தொகை புதிய வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் ஒதுக்­கப்­பட்டு இருக்­கிறது.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­ களைப் பொறுத்­த­வரை பரந்த அள­வி­லான அடிப்­ப­டை­யில் அவற்­றின் உற்­பத்­தித்­தி­ற­னைப் பெருக்­கு­வதே நமது முன்­னு­ரிமை என்று நிதி அமைச்­சர் தெரி­வித்­தார்.

இந்த நிதி ஆத­ர­வின் மூலம் அடுத்த நான்­காண்­டு­களில் 100,000க்கும் மேற்­பட்ட உற்­பத்­தித் திறன் திட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு கிடைக்­கும் என்று மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

உள்­ளூர் நிறு­வ­னங்­கள் ஆய்வு, மேம்பாட்டு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள மேலும் ஆத­ரவை அர­சாங்­கம் வழங்­கும்.

உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளுக்­கும் பல­துறை தொழில் கல்­லூ­ரி­கள், தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் உள்ள 80 தொழில்­நுட்ப புத்­தாக்க நிலை­யங்­க­ளுக்­கும் இடை­யில் மேலும் ஒத்­து­ழைப்பு இடம்­பெ­று­வ­தைக் காண தான் விரும்­பு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

உள்­ளூர் நிறு­வ­னங்­கள் மற்­றும் ஊழி­யர் அணி­யின் மின்­னி­லக்க ஆற்­றல் மேம்­ப­டு­வ­தற்­கான திட்­டங்­க­ளை­யும் அடுத்த சில ஆண்டு­ களில் கூடு­த­லாக $200 மில்­லி­யன் தொகையை ஒதுக்கி அர­சாங்­கம் மேம்­ப­டுத்­தும் என்­றும் திரு வோங் அறி­வித்­தார்.