பயோஎன்டெக் போன்ற நிறுவனங்களால் வேலை வாய்ப்பு

பயோஎன்டெக் போன்ற நிறுவனங்களால் வேலை வாய்ப்பு

2 mins read
0216850c-4717-4629-85f6-99a9f0e8ff61
-

சிங்­கப்­பூ­ரில் வட்­டார தலை­மை­ய­கத்தை அமைக்­கும் பயோ­என்­டெக் போன்ற நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நல்ல வேலை­களை உரு­வாக்­கித் தரும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

உயி­ரி­யல் தொழில்­நுட்­பத் துறை­யில் வேலை பார்க்க விரும்­பும் மக்­க­ளுக்கு இத்­த­கைய நிறு­வ­னங்­களில் பணி­யாற்ற வாய்ப்பு கிடைக்­கும்.

கொவிட்-19 சூழ்­நி­லையை திறம்­பட கையாண்டு அதே நேரத்­தில் மேலும் முத­லீ­டு­க­ளை­யும் புத்­தாக்­கத் திட்­டங்­க­ளை­யும் சிங்­கப்­பூர் கவர்ந்து ஈர்த்து இருக்­கிறது என்று நிதி அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

கொரோனா தொற்று தொடர்­பில் நாம் செயல்­பட்ட விதம் மற்ற நாடு­களில் இருந்து நம்மை தனி­மைப்­ப­டுத்­திக் காட்­டி­யது.

"நாம் விமான நிலை­யத்தை, துறை­மு­கத்­தைத் திறந்தே வைத்து இருந்­தோம். முக்­கி­ய­மான பொருள் சேவை­கள் வந்து செல்­வ­தற்கு இடை­யூறு இல்­லா­மல் பார்த்­துக்­கொண்­டோம். நம்­பிக்­கைக்கு உகந்த நாடு என்ற நம்­மு­டைய நற்­பெ­யரை நன்கு பலப்­ப­டுத்­திக் கொண்­டோம்," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

இந்த வட்­டா­ரத்­தில் புதிய சந்­தை­க­ளைத் தேடி விரி­வ­டைய விரும்­பும் உலக நிறு­வ­னங்­க­ளுக்கு உத்­தி­பூர்வ உந்­து­த­ள­மாக சிங்­கப்­பூர் தொடர்ந்து திக­ழும் என்று தெரி­வித்த அமைச்­சர், பயோ­என்­டெக் நிறு­வ­னத்தை எடுத்­துக்­காட்­டா­கக் குறிப்­பிட்­டார். ஜெர்­ம­னியை சேர்ந்த அந்த நிறு­வ­னத்­தின் புதிய நிலை­யம் 2023ல் செயல்­ப­டத் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அங்கு குறைந்­த­பட்­சம் 80 பேருக்கு வேலை கிடைக்­கும்.

இந்த விரி­வாக்­கத் திட்­டத்­திற்கு பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் ஆத­ரவு அளிக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் நிறு­வ­னங்­களை அமைக்­க­வும் தலை­மை­ய­கங்­களை ஏற்­ப­டுத்­த­வும் உலக நிறு­வ­னங்­கள் புதிய முத­லீ­டு­களை செய்­கின்­றன. திட்­டம் தீட்­டு­கின்­றன. அவற்­றின் மூலம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நல்ல வேலை­கள் கிடைக்­கும் என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.