பயிற்சி, உரு­மாற்­றத் திட்­டங்­க­ளுக்கு $100 மி.

பயிற்சி, உரு­மாற்­றத் திட்­டங்­க­ளுக்கு $100 மி.

2 mins read
25c726a9-5929-4bc4-a947-61d9a64ffeff
-

சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் அவற்­றின் ஊழி­யர்­க­ளுக்­கான பயிற்சி மற்­றும் உரு­மாற்­றத் திட்­டங்­களை நடைமுறைப்படுத்த உத­வும் நோக்­கில், அர­சாங்­கம் 100 மில்­லி­யன் வெள்­ளியை ஒதுக்­கி­யுள்­ளது.

இந்த நிதி­யின் ஒரு பகுதி புதிய மானி­யத்­திற்­குச் செல­வி­டப்­படும்.

உரு­மாற்­றத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த நிறு­வன அள­வி­லான பயிற்­சிக் குழுக்­களை அமைத்­தி­ருக்­கும் நிறு­வ­னங்­ களுக்கு அந்த மானி­யம் உத­வும் என்று நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

நிறு­வ­னப் பயிற்­சிக் குழுக்­களில், நிர்­வா­கம், ஊழி­யர் சங்­கத் தலை­வர்­கள் என இரு தரப்­புப் பிர­தி­நி­தி­களும் இடம்­பெற்­றி­ருப்­பர்.

பயிற்­சித் திட்­டங்­களை மறு­ஆய்வு செய்து, திறன் இடை ­வெ­ளி­யைக் கண்­ட­றி­வது அவர்­கள் பணி.

அத்­து­டன், ஊழி­யர்­க­ளுக்­கான மறு­தி­றன் மேம்­பாடு, பணி முன்­னேற்­றம் ஆகி­ய­வற்­றைத் திட்­ட­மிட்டு, புதிய பயிற்­சித் திட்­டங்­க­ளை­யும் அவர்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­து­வர்.

நிறு­வ­னப் பயிற்­சிக் குழு அமைக்­கும் திட்­டம் 2019ல் அறி­மு­க­மா­னது. அடுத்த மூவாண்­டில் ஆயி­ரம் குழுக்­களை அமைத்து 330,000 ஊழி­யர்­க­ளுக்கு உத­வத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) கூறி­யி­ருந்­தது.

இது­வரை சுமார் 800 குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

ஊழி­யர் சங்­கங்­க­ளை­யும், முத­லா­ளி­க­ளை­யும் ஒருங்­கி­ணைக்­கும் அத்­த­கைய நிறு­வ­னப் பயிற்­சிக் குழுக்­கள் மூலம், உரு­மாற்­றத்­துக்­குத் தேவை­யான பயிற்­சித் திட்­டங்­கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.

மேம்­பட்ட சம்­ப­ளம், ஊழி­யர் நலன் போன்­ற­வற்­றில் கவ­னம் செலுத்­தும் அந்­தத் திட்­டங்­கள் பின்­னர் சம்­பந்­தப்­பட்ட அர­சாங்க அமைப்­பு­க­ளின் ஆத­ர­வோடு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அமைச்­சர் வோங் குறிப்­பிட்­டார்.

பெரிய நிறு­வ­னங்­கள், துறை சார்ந்த சிறிய நிறு­வ­னங்­க­ளுக்­குப் பயிற்சி மற்­றும் ஆலோ­சனை வழங்கவும் முயற்சி எடுக்­கப்­ப­டு­கிறது.

அதன் தொடர்­பில், வர்த்­த­கச் சங்­கங்­கள், சம்­மே­ள­னங்­கள், சிங்­கப்­பூர் வர்த்­த­கச் சம்­மே­ள­னம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து அதி­கா­ரி­கள் செயல்­ப­டு­வர் என்­றும் தமது வர­வு­செ­ல­வுத் திட்ட உரை­யில் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.