சிங்கப்பூரில் பொதுத் துறையின் பசுமை உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு நிதி வளத்தைப் பெருக்கும் வகையில் 2030 ஆம் ஆண்டுவாக்கில் ஏறக்குறைய $35 பில்லியன் பசுமைப் பத்திரங்கள் வெளியிடப்படும்.
பசுமைப் பத்திரங்கள் என்பவை நிதித்துறை பத்திரங்கள். சுற்றுப்புற ஆதரவுத் திட்டங்களுக்கு அவற்றின் மூலம் நிதி பெற முடியும்.
அந்த பத்திரங்களில் முதலீடு செய்வோருக்கு முறையாக அல்லது நிரந்தரமாக வருவாய் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
அரசாங்கம் சிங்கப்பூர் பசுமைப் பத்திரங்கள் கட்டமைப்பு ஒன்றை வெளியிடும். இந்த ஆண்டு பிற் பகுதியின் தொடக்கமாக இந்தப் பத்திரங்கள் வெளியிடப்படும்.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தனது வரவுசெலவுத் திட்ட உரையில் இதனை தெரிவித்தார்.
தேசிய சுற்றுப்புற வாரியம் முதல் அரசாங்க அமைப்பாக சென்ற ஆகஸ்ட்டில் $3 பில்லியன் பல நாணய நடுத்தர ரக பத்திரங்கள் மற்றும் பசுமைப் பத்திரங்கள் கட்டமைப்பை தொடங்கியது.
அந்தப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் தொகை சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

