'வங்கிகள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்'

'வங்கிகள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்'

1 mins read
fe387b15-3d71-42e4-ab05-85f47f4d25a8
-

வங்­கி­கள் அவற்­றின் வாடிக்­கை­

யா­ளர்­க­ளி­டம் நியா­ய­மான முறை­யில் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் எதிர்­பார்க்­கிறது. வங்­கி­கள் அவற்­றின் சேவை­க­ளுக்­காக வசூ­லிக்­கும் கட்­ட­ணத் தொகை குறித்து ஆணை­யம் குறுக்­கிடா­த­போ­தி­லும் இந்த எதிர்­பார்ப்பு

அத­னி­டம் உள்­ளது. தாம­த­மா­கச் செலுத்­தப்­படும் கட்­ட­ணங்­க­ளுக்­கான கூடு­தல் தொகை, வட்டி விகி­தம் ஆகி­ய­வற்றைக் கடன் அட்டை அறிக்­கை­யில் வங்கி தெளி­வா­கக் குறிப்­பிட வேண்­டும் என்று ஆணை­யம் வலி­யு­றுத்­தி­யது.

முந்­திய மாதத்­துக்­கான கடன் அட்டை கட்­ட­ணத்­தைச் செலுத்­தாத வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் கடனை முழு­மை­யாக அடைக்க அவர்­களுக்கு வழங்­கப்­படும் கால அளவு, வட்டி மற்­றும் இதர கட்­ட­ணங்­கள் உட்­பட செலுத்த தேவை­யான மொத்த தொகை ஆகிய விவ­ரங்­களை கட்­டண அறிக்­கை­யில் வங்கி குறிப்­பிட வேண்­டும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

"கடன் அட்டை கட்­ட­ணங்­கள் குறித்து வெளிப்­ப­டை­யான தக­வல்­கள் இருந்­தால் தங்­க­ளுக்­குத் ஏற்­பு­டைய, தேவை­யான சேவையை வாடிக்­கை­யா­ளர்­கள் தேர்ந்­

தெ­டுக்­க­லாம்," என்று வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர்

ஆல்­வின் டான் நேற்று நாடாளு

மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

"கடன் அட்­டைக்­குப் பதிவு செய்­வ­தற்கு முன்பு அது­தொ­டர்­பான விவ­ரங்­கள், நிபந்­த­னை­கள் பற்றி வங்கி வாடிக்­கை­யா­ளர்­கள் கேட்­டுத் தெரிந்­து­கொள்ள வேண்­டும்," என்­றார் திரு டான்.

மவுண்ட்­பேட்­டன் தனித் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு லிம் பியாவ் சுவான் கேட்ட கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் திரு டானின் உரை அமைந்­தது.