பெஞ்சுரு வட்டாரத்தில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கி ஒன்று விழுந்தது.
இந்தச் சம்பவம் நேற்று காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்தது.
பாரந்தூக்கி விழுந்து கிடப்பதைக் காட்டும் படங்களை வாசகர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அனுப்பி வைத்தார். தரையில் கிடந்த பாரந்தூக்கியைச் சுற்றி இடிபாடுகள் இருப்பதைப் படங்களால் காண முடிந்தது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நம்பப்படுகிறது. பாரந்தூக்கி விழுந்தது குறித்து தனக்குத் தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மனிதவள அமைச்சின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 23 வேலையிட மரணங்கள் பதிவாகின.
2020ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 17 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன.
2020ஆம் ஆண்டின் பிற்பாதியில் 13 வேலையிட மரணங்கள் பதிவாகின.

