நன்கொடைத் திட்டங்களுக்காக மேலும் $100 மில்லியனை டிபிஎஸ் வங்கி ஒதுக்கவுள்ளது. இத்துடன் 2014ஆம் ஆண்டிலிருந்து $160 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்பட்டது.
புதிதாக ஒதுக்கப்படும் நிதி, வங்கியின்கீழ் இயங்கும் அறநிறு
வனத்திற்குச் செல்லும். எட்டு ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த அறநிறுவனம், வழக்கமாக சமூக தொழில்முனைப்பை முதன்மைப்
படுத்தி வருகிறது.
இனி, பரந்த அளவிலான சமூகத்திற்கும் அறநிறுவனம் அதன் ஆதரவை நல்கவுள்ளது.
முதியோர், கல்வி, சுற்றுச்சூழல் போன்ற அம்சங்கள் தொடர்பில் நன்கொடை வழங்குவதிலும் தொண்டூழிய முயற்சிகளை மேற்கொள்வதிலும் நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது.
இதன்படி நிதி, மின்னிலக்க அறிவை மேம்படுத்துவது, உணவுக் கழிவைக் குறைப்பது போன்ற முயற்சிகளை நிறுவனம் மேற்கொள்ளும்.
ஆய்வுகளின்படி, 2050ஆம் ஆண்டுக்குள் ஆசியர்களில் 25 விழுக்காட்டினருக்கு 60 வயது அல்லது அதற்கும் அதிக வயதாக இருக்கலாம்.
இதனால் விரைந்து மூப்படையும் மக்களைக் கொண்ட ஆசியாவில் சமூகப் பொருளியல் விளைவுகள் தொடர்பில் கவலைகள் எழக்கூடும் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டதை டிபிஎஸ் சுட்டியது.
உலகளவில் தயாரிக்கப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது என்றும் டிபிஎஸ் உணவுக் கழிவு தொடர்பில் குறிப்பிட்டது.
இவற்றில் பாதிச் சம்பவங்கள், போதுமான ஊட்டச்சத்து இல்லாத மக்கள் வசிக்கும் ஆசிய நாடுகளில் பதிவாகியதாக நிறுவனம் குறிப்பிட்டது.
பருவநிலை மாற்றத்திற்கும் உணவுக் கழிவு ஒரு காரணியாக உள்ளது.
இதுவரை வட்டாரத்தில் உள்ள 90க்கும் மேற்பட்ட சமூக நிறுவனங்களுக்கு $10 மில்லியனுக்கும் மேலான தொகையை அறநிறுவனம் மானியங்களாக வழங்கியுள்ளது.

