தடுப்பூசி போட்டிருந்தால் அட்டவணை முறைப்படி பரிசோதனை நடைமுறை இல்லை

தடுப்பூசி போட்டிருந்தால் அட்டவணை முறைப்படி பரிசோதனை நடைமுறை இல்லை

2 mins read
2a01a557-7e0e-45d4-b568-c52973366abe
-

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட தங்­கு­வி­டு­தி­க­ளுக்­கும் கட்­டு­மா­னம், கடல் பட்­டறை மற்­றும் செயல்­மு­றைப் பொறி­யி­யல் துறை­களில் வேலை செய்­யும் ஊழி­யர்­க­ளுக்­கு இன்­று­மு­தல் அட்­ட­வணை அடிப்­ப­டை­யி­லான கொவிட்-19 பரி­சோ­தனை நடை­முறை இருக்­காது.

தங்­கு­வி­டு­தி­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான பொழு­து­போக்கு நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் பணி­யாற்­றும் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் இந்த விலக்கு வழங்­கப்

­ப­டு­வ­தாக தங்­கு­வி­டுதி நடத்­து­நர்­க­ளுக்கு மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது. ஓமிக்­ரான் உரு­

மா­றியகிரு­மி­யின் வேறு­பட்ட தன்­மை­க­ளுக்கு ஏற்ப தற்­போ­தைய விதி­மு­றை­களை மாற்­றி­ய­மைப்­ப­தன் ஓர் அங்­க­மாக, ஊழி­யர்­க­ளுக்கு இவ்­வாறு கொவிட்-19 பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தாக புதன்­கி­ழ­மை­யன்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­னார்.

'தொற்று இடை­வெளி' அதா­வது முத­லில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர் தொற்­றின் அறி­கு­றி­களை உணர்­வ­தற்­கும் அடுத்த நபர் தொற்­றுக்கு ஆளாகி அறி­கு­றி­களை உணர்­வ­தற்­கும் இடையே உள்ள கால­கட்­டம் ஓமிக்­ரா­னைப் பொறுத்­த­வரை இரண்டு நாள்­களே. இந்­தக் குறு­கி­ய­கா­லத்தில் அட்­ட­வணை முறைப்­படி பரி­சோ­தனை செய்­வது பயன் அளிக்­காது என்று

அமைச்­சுகள்­நிலை பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவர் குறிப்­பிட்­டார். உடல் நல­மில்லை என்­றால், உடனே 'ஏஆர்டி' பரிசோதனை செய்­து­கொண்டு

கிரு­மித்­தொற்று இல்லை என்று உறு­தி­செய்­த பின் வெளியே போக­லாம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தடுப்­பூசி போட்­டி­ராத அல்­லது முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ராத ஊழி­யர்­கள் தங்­கு­வி­டு­தி­யில் வசித்­தால், மூன்று நாள்­க­ளுக்கு ஒரு­முறை முத­லா­ளி­யின் மேற்­பார்­வை­யில் 'ஏஆர்டி' பரிசோதனை செய்­து­கொள்ள வேண்­டும்.

கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­கும் இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­ன­ருக்­குக் கடும்­பா­திப்பு ஏற்­படும் சாத்­தி­யம் அதி­கம் என்­ப­தால் அட்­ட­வணை முறைப்­படி பரி­சோ­தனை செய்­வ­தன் மூலம் அவர்­க­ளின் ஆரோக்­கி­யத்­தைக் கண்­கா­ணிக்க முடி­யும் என்று மனி­த­வள அமைச்சு அதன் அறி­வு­றுத்­த­லில் குறிப்­பிட்­டி­ருந்­தது.

பிரானி, பாசிர் பாஞ்­சாங் தங்­கு ­வி­டு­தி­களில் வசிக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் பரி­சோ­த­னை­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­ப­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

திங்­கட்­கி­ழமை நில­வ­ரப்­படி, தங்குவி­டு­தி­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களில் 98 விழுக்­காட்­டி­ன­ருக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­ட­தாக தமது எழுத்­து­பூர்வ நாடா­ளு­மன்ற பதி­லில் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் குறிப்­பிட்­டி­ருந்­தார்.