இந்த மாவை பயன்படுத்தாதீர்

இந்த மாவை பயன்படுத்தாதீர்

1 mins read
c64905cb-fee3-4e4f-8f81-4e43344fabd4
அமெரிக்காவில் இருந்து வரும் இந்த மாவைப் பயன்படுத்தக் கூடாது என்று பெற்றோர், கைக்குழந்தைப் பராமரிப் பாளரிடம் சிங்கப்பூர் உணவு முகவை கூறியுள்ளது. படம்: சிங்கப்பூர் உணவு முகவை/ஃபேஸ்புக் -

'அப்­போட்' என்ற நிறு­வ­னம் தயா­ரிக்­கும் கைக்­கு­ழந்­தைக்­கான சில­ வகை அலி­மெண்­டம் மாவு சிங்­கப்­பூ­ரில் மீட்­டுக்­கொள்­ளப்­படு­கிறது.

அதில் பாக்­டீ­ரியா கிரு­மி­கள் இருக்­கக்­கூ­டிய வாய்ப்பு இருப்­பதே இதற்­கான கார­ணம். அமெ­ரிக்­கா­வில் இருந்து வரும் அத்­தகைய மாவை பெற்­றோ­ரும் பரா­ம­ரிப்­பா­ளர்­களும் பயன் படுத்தக்கூடாது என்று நேற்று சிங்­கப்­பூர் உணவு முகவை அமைப்பு தெரி­வித்­தது.

அந்த மாவை உட்­கொண்­ட­தற்­குப் பிறகு குழந்­தை­க­ளுக்கு உடல்­நிலை சரி­யில்­லா­மல் போனால் உட­ன­டி­யாக மருத்து­வரின் உத­வியை அவர்­கள் நாட வேண்­டும்.

பாக்­டீ­ரியா கிருமி இருப்­ப­தாகச் சந்­தே­கப்­படும் மாவின் காலா­வ­தித் தேதி 2022 ஏப்­ரல் 1 அல்­லது அதற்­குப் பிந்­தைய தேதி­யாக இருக்­கும்.

பாக்­டீ­ரியா கிருமி இருப்­ப­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் மாவை மீட்­டுக்­கொள்­ளும்­படி அப்­போட் லேப­ரட்­ட­ரிஸ் நிறு­வ­னத்­துக்கு இந்த முகவை உத்­த­ர­விட்டு உள்­ளது.

இந்த நடை­முறை இப்­போது இடம்­பெற்று வரு­வதாகத் தெரி விக்கப்பட்டு உள்ளது.