லிட்டில் இந்தியாவில் விதிமீறல்; விசாரணை

சிங்­கப்­பூர் காவல்­துறை 97 பேரை விசா­ரித்து வரு­கிறது. அவர்­களில் இரவு விடுதி கேளிக்­கைப் பெண்கள் என்று சந்­தே­கிக்­கப்­படும் சீனாவைச் சேர்ந்த, நால்வரும் அடங்­கு­வர். அந்த நால்­வரில் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யாகி இருந்­தது.

சையது ஆல்வி ரோட்­டில் உரிமம் பெறாமல் செயல்­பட்ட கேடிவி பாணி கூடம் ஒன்றில் கூடி கொவிட்-19 பாது­காப்பு விதி­களை அவர்­கள் மீறி இருப்பதாகக் கூறப்­படு­கிறது.

லிட்­டில் இந்­தி­யா­வில் இருக்­கும் கடைத்­தொ­குதி ஒன்­றில் உணவு, பாண விடு­தி­யா­கச் செயல்­பட்ட கூடம் ஒன்றை காவல் துறை பிப்ரவரி 15ஆம் தேதி சோத­னை­யிட்­டது.

அந்த விடு­தி­யில் தடுப்­புக் கதவு ஒன்­றுக்­குப் பின்­பு­றத்­தில் மறை­வா­கச் செயல்­பட்ட கேடிவி பாணி கூடத்­தில் 60 ஆட­வர்­களும் 37 மாதர்­களும் இருந்­த­தாக காவல் துறை நேற்று தெரி­வித்­தது. அவர்­களுக்கு வயது 24 முதல் 65 வரை.

அந்­தக் கடைத்­தொ­கு­தி­யின் மூன்று மேல் மாடி­களில் 22 கரா­வோக்கே அறை­கள், சாத­னங்­களு­டன் இருந்­தது மேலும் நடத்­தப்­பட்ட புலன்­வி­சா­ரணை மூலம் தெரிய வந்­தது. அங்கு இருந்­த­வர்­க­ளுக்கு உணவு, பான விடு­தி­யில் இருந்து மது­பா­னம் விற்­கப்­பட்­டது.

அங்கு இருந்தவர்களில் சீனா வைச் சேர்ந்த நான்கு பெண்கள், கேளிக்­கைப் பெண்களாக செயல்­பட்டு இருக்­கி­றார்­கள் என்று சந்­தே­திக்­கப்­ப­டு­கிறது. அவர்­களில் ஒரு­வ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருந்­தது தெரி­ய­வந்­தது.

அந்த நான்கு பெண்­களும் வெளி­நாட்டு ஊழி­யர் வேலை நியமனச் சட்­டத்­தின் கீழ் கைதா­யி­னர். அந்­தப் பெண்­கள் 33 வயது முதல் 48 வய­துள்­ள­வர்­கள்.

உரி­மம் பெறாத அந்த கேடிவி பாணி விடு­தியை நடத்­தி­ய­தா­கக் கூறப்­படும் 41 வயது ஆட­வர், மது­பா­னக் கட்­டுப்­பாட்­டுச் சட்­டத்­தின்­கீழ் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்.

அதோடு, அனு­ம­திக்­கப்­ப­டாத ஒரு நிலை­யத்­திற்­குள் பல­ரை­யும் அனு­ம­தித்து அதன் மூலம் பாது காப்பு விதி­களை மீறி­ய­தா­கக் கூறப்­படுவதன் தொடர்­பி­லும் அதிகாரி கள் அவரை விசா­ரிக்கி­றார்­கள்.

கொவிட்-19 பாது­காப்பு விதி­களை மீறு­வோ­ருக்கு ஆறு மாதம் வரை­ப்பட்ட சிறைத் தண்­டனை, $10,000 வரைப்­பட்ட அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

செல்­லு­ப­டி­யா­கக்கூடிய உரி­மம் இன்றி பொதுப் பொழு­து­போக்கு விடு­தி நடத்தி அங்கு மது­பா­னம் விற்­றால் $20,000 வரை அப­ர­தம் உண்டு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!