குறைந்த சம்பள ஊழியருக்கு 140,000 ஏஆர்டி கருவிகள்

குறைந்த சம்பள ஊழியருக்கு 140,000 ஏஆர்டி கருவிகள்

1 mins read
ef8b912c-b50d-4628-ac72-49fa894c6ee6
-

குறைந்த சம்பளம் பெறும் சிங்கப்பூர்வாசிகள், சமூக சேவை அலுவலகங்களிலும் குடும்ப சேவை நிலையங்களிலும் ஐந்து ஏஆர்டி கருவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவித்துள்ளார்.

இதற்கு ஏதுவாக, இங்குள்ள 24 சமூக சேவை அலுவலகங் களுக்கும் 47 குடும்ப சேவை நிலையங்களுக்கும் சுமார் 140,000 ஏஆர்டி பரிசோதனைக் கருவிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் திரு ஓங், ஃபேஸ்புக்கில் இந்த விவரங்களை அறிவித்துள்ளார்.

ஏஆர்டி பரிசோதனைக் கருவிகளை வாங்கும் செலவைச் சமாளிக்கவும் தேவைப்படும் நேரத்தில் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் இது உதவும் என்றார் திரு ஓங்.

உதவி தேவைப்படும் குறைந்த சம்பள ஊழியர்கள் இந்த அமைப்புகளை அணுகலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏஆர்டி கருவிகளைச் சமூக சேவை அலுவலகங்களில் வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சும் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் கூறினார்.