56,000 பழைய வீவக வீடுகள் மேம்படுத்தப்படும்

56,000 பழைய வீவக வீடுகள் மேம்படுத்தப்படும்

1 mins read
d9c6c66e-503b-45d0-8414-3bd7f7953746
1987க்கும் 1997க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட 230,000 வீடுகள் மேம்படுத்தப்படும் (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைமஸ்) -

இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 230,0000 கழக வீடுகள் மேம்படுத்தப்படும் என வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இன்று (பிப்ரவரி 20) தெரிவித்தது.

1987க்கும் 1997க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இதன் மூலம் பயனடையும்.

முதல் கட்டமாக 56,000 வீடுகளை மேம்படுத்தும் பணி தொடங்கவுள்ளதாகக் கழகம் கூறியது.

வீட்டின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள விரிசல்கள், கான்கிரீட் பழுதுபார்ப்பு, துணிகளைக் காயவைக்கும் வசதிகள் ஆகியவை இலவசமாகச் செய்துதரப்படும்.

புதிய வாயிற்கதவுகள் போன்ற இதர அம்சங்களுக்கு அரசாங்கம் 95 விழுக்காடு வரை சலுகை வழங்கும்.

இதோடு, சுறுசுறுப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதியர்களுக்கான கைபிடி கம்பிகள், கழிவறை சீரமை உள்ளிட்ட பணிகள் சலுகை விலையில் செய்யப்படும்.

சென்றாண்டு நிலவரப்படி இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்காக அரசாங்கம் சுமார் $3.4 பில்லியன் செலவிட்டுள்ளது.