புதிதாக 15,836 பேருக்குத் தொற்று; நால்வர் மரணம்

புதிதாக 15,836 பேருக்குத் தொற்று; நால்வர் மரணம்

1 mins read
ed5f0821-9823-4eb9-8e73-336af89a2c3e
-

சிங்­கப்­பூ­ரில் சனிக்­கி­ழமை புதிதாக 15,836 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அவர்­களில் 15,699 பேர் உள்ளூர் மக்­கள். 137 பேர் வெளி­நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக தொற்று ஏற்­பட்டவர்­க­ளின் எண்­ணிக்கை 18,094 ஆக இருந்­தது.

சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி 1,491 பேர் மருத்­து­வ­மனைகளில் சிகிச்சை பெற்று வந்­த­னர். வெள்ளியன்று இந்த எண்ணிக்கை 1,458ஆக இருந்­தது.

கொவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறு­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து பதினைந்தாவது நாளாக ஆயிரத்­துக்கும் அதிகமாவே இருந்­து­வரு­கிறது. மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறு­வோ­ரில் 182 பேருக்குச் செயற்கை சுவா­சம் அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

தீவிர சிகிச்­சைப் பிரி­வில் 43 பேர் உள்­ள­னர். கொவிட்-19க்கு மேலும் நால்­வர் உயி­ரி­ழந்­த­னர்.

வாராந்­திர தொற்று விகி­தம் வெள்­ளிக்­கி­ழமையிலி­ருந்து சற்று அதி­க­ரித்து சனிக்­கி­ழமை 1.54ஆக இருந்­தது. வெள்­ளிக்­கி­ழமை அது 1.46ஆக இருந்­தது.

தொற்று தலை­காட்­டி­யது முதல் இங்கு கெரோனா கிருமி தொற்றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை 567,355 ஆக இருந்­தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.