குடியிருப்பு வட்டார விழா

குடியிருப்பு வட்டார விழா

1 mins read
b2fce3bc-b496-481a-a02d-14839daf5fb5
குடியிருப்பு வட்டாரங்களில் செயல்படும் சில்லறை வர்த்தகக் கடைகளுக்கு 20 விழுக்காடு வர்த்தகம் கூடியது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

குடியிருப்பு வட்டாரங்களுக்கு மக்களை ஈர்த்து அவர்­கள் அங்கு அதிக நேரத்­தை­யும் பணத்­தை­யும் செல­வி­டு­மாறு ஊக்­க­மூட்­டும் விழா இந்த ஆண்டு பிற்­ப­கு­தி­யில் இரண்­டா­வது முறை­யாகத் திட்­ட­மிடப்­பட்டு உள்­ளது.

மூன்று மாதம் நடந்த அந்த விழா நேற்­று­டன் வெற்­றி­க­ர­மான முறை­யில் முடி­வ­டைந்­தது.

அதைத் தொடர்ந்து மீண்­டும் அந்த விழாவை நடத்த திட்­ட­மிடப்­ப­டு­கிறது.

'குடியிருப்பு வட்டார விழா' என்ற அந்த விழா சென்ற நவம்­பரில் தொடங்­கப்­பட்­டது. விழாக்காலத்­தில் மக்­கள் $330,000 தொகை­யைச் செல­விட்­ட­னர்.

சில்­லறை வர்த்­தக வியா­பாரி­களுக்கு 20 விழுக்­காடு வியா­பா­ரம் கூடி­யது. அந்த விழாவை முடித்து வைக்க நேற்று நடந்த நிகழ்ச்­சி­யில் வர்த்­தக தொழில் துணை அமைச்­சர் லோ யென் லிங் கலந்­து­கொண்­டார்.

2020 அக்­டோ­ப­ரில் நகர மைய மின்­னி­லக்­க­மயத் திட்­டம் தொடங்­கப்­பட்­ட­தில் இருந்து குடியிருப்புப் பகு­தி­களில் செயல்­படும் கடை­களில் மின்­னி­லக்க முயற்­சி­கள் அதி­க­ரித்து இருப்­ப­தா­க­வும் திரு­வாட்டி லோ கூறி­னார்.