'மதர்ஷிப்' ஊடக அங்கீகாரம் தற்காலிக ரத்து

'மதர்ஷிப்' ஊடக அங்கீகாரம் தற்காலிக ரத்து

1 mins read
90252375-9e09-47f5-a648-90aa2eb5494e
-

'மதர்ஷிப்' என்ற உள்ளூர் ஊடகத்திற்கான செய்தித்துறை அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

வரவுசெலவுத் திட்டச் செய்தி தொடர்பான வெளியீட்டு நிபந்தனையை அது மீறியதால் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவுத் திட்ட அறிவிப்புக்குக் கொஞ்சம் முன்னதாக குறிப்பிட்ட ஊடகங்களுடன் வரவு செலவுத் திட்ட தகவல்களை mothership.sg இணைய ஊடகம் பகிர்ந்துகொண்டு இருக்கிறது. இதன் மூலம் அது நிபந்தனையை மீறி இருக்கிறது. இதனால் அதன் ஊடக அங்கீகாரம் தற்காலிக மாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தொடர்பு, தகவல் அமைச்சின் பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.

மேல்முறையீடு செய்ய மார்ச் 4ஆம் தேதி வரை அதற்கு அவகாசம் உள்ளது.

நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வு திட்ட விவரங்களை அறிவிப்பதற்கு முன்னதாக மதர்ஷிப் ஊடகம் அந்த வரி உயர்வு தொடர் பான தகவல் வரைபடத்தை வெளியிட்டு இருப்பதாகத் தெரிகிறது.