மோசடிப் பேர்வழிகளை தலையெடுக்காமல் செய்ய தொண்டூழியர்கள் உதவியுடன் புதிய இயக்கம்

மோசடிப் பேர்வழிகளை தலையெடுக்காமல் செய்ய தொண்டூழியர்கள் உதவியுடன் புதிய இயக்கம்

2 mins read
2900ee83-2707-4a43-b8c9-882cb448fd5d
-

மோச­டிப்­ பேர்­வ­ழி­க­ளி­டம் $80,000ஐ பறி­கொ­டுத்த 34 வயது சிங்­கப்­பூர் மாது அத­னால் மன­மொ­டிந்து போகா­மல் துணிச்­ச­லு­டன் அத்­தகைய மோச­டிப்­ பேர்­வ­ழி­க­ளுக்கு எதி­ராக மோசடி எதிர்ப்பு இணை­யத்­த­ளம் ஒன்றைத் தொடங்­கி­னார்.

இணை­யத்­தில் கைவ­ரி­சை காட்டும் தில்­லு­முல்லுப் பேர்­வ­ழி­களால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­து­களை எடுத்­துச் சொல்லி அப்­பாவி மக்களை எச்­ச­ரிப்­பது அந்த இணை­யத்­த­ளத்­தின் நோக்­கம்.

அந்த மாது ஏற்­ப­டுத்­திய 'உலக மோசடி எதிர்ப்பு இயக்­கம்' (Gaso) என்ற அமைப்பு உலகம் முழு­வ­தை­யும் சேர்ந்த 60 பேரைக் கவர்ந்து அவர்­களைத் தொண்­டூ­ழி­யர்­க­ளாகக் கொண்டு செயல்­ப­டு­கிறது. அந்த 60 பேரும் மோச­டி­களுக்கு இலக்­கா­ன­வர்­கள்.

இந்த இயக்­கத்­தின் மூலம் இத்­தொண்­டூ­ழி­யர்­கள் சிங்­கப்­பூர் உள்ளிட்ட பல நாடு­க­ளை­யும் சேர்ந்த 5,000க்கும் மேற்­பட்ட மக்களைச் சரி­யான நேரத்­தில் தலை­யிட்டுக் காப்­பாற்றி உள்ளனர்.

இல்லை என்­றால் அவர்­கள் மோச­டிப்­ பேர்­வ­ழி­க­ளி­டம் சிக்கி மில்லி­யன் கணக்­கான பணத்தை இழந்து இருப்­பார்கள்.

மோச­டி­க­ளுக்கு இலக்­கான பலரி­டம் இருந்­தும் தக­வல்­களை எல்­லாம் திரட்டி அவற்றை இங்­கும் வெளி­நா­டு­க­ளி­லும் செயல்­படும் சட்ட அம­லாக்க அமைப்­பு­க­ளுக்கு அந்­தத் தொண்­டூ­ழி­யர் குழு கொடுத்து வரு­கிறது. இதன்­மூ­லம் மோசடிக் கும்­பல்­களைக் கண்­காணிக்க வழி ஏற்­படும்.

சிங்­கப்­பூ­ரி­லும் அமெ­ரிக்கா, பிரிட்­டன், பிரான்ஸ், சீனா, ஆஸ்­தி­ரே­லியா, தாய்­லாந்து, மலே­சியா போன்ற நாடு­க­ளி­லும் தளம் கொண்டு செயல்­படும் அந்­தத் தொண்­டூ­ழி­யர்­கள் சொந்த பெயரைப் பயன்­ப­டுத்­து­வ­தில்லை. போலியான பெயர்­க­ளைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள். இதன்­மூ­லம் அவர்கள் தங்­களைக் காத்துக் கொள்­கி­றார்­கள்.

இவ்­வே­ளை­யில், மோச­டி­கள் பற்றிக் கருத்துக் கூறிய அந்­த சிங்­கப்­பூர் மாது, மக்­களை விவே­க­மிக்­க­வர்­க­ளாக ஆக்­கு­வதே மோசடிப்­ பேர்­க­ளி­டம் இருந்து அவர்­களைக் காப்­ப­தற்­கான தலை­சி­றந்த வழி என்று அவர் தெரி­வித்­தார்.

"புதிய பாணி மோசடி தெரி­ய­வரும்போது அதுபற்றி உட­ன­டி­யாக நாங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் எச்­ச­ரிக்­கி­றோம். இதன்­மூ­லம் அத்­தகைய மோச­டிப்­ பேர்­வ­ழி­களை ஒடுக்­கி­வி­டு­கி­றோம்," என்றாரவர்.

சிங்கப்பூரில் ஏறத்தாழ 50 பேர் இந்த இயக்கத்தின் ஆதரவை நாடி உள்ளனர். அவர்கள் பலதரப்பட்ட முதலீடு தொடர்பான மோசடிகளில் கிட்டத்தட்ட $10 மில்லியனை இழந்து இருக்கிறார்கள்.