மழை, வெள்ள எச்சரிக்கை

மழை, வெள்ள எச்சரிக்கை

1 mins read
89baa8c7-e84a-4404-a9a6-1ac8a592f215
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று பிற்­ப­க­லில் பெய்த கடும் மழை கார­ண­மாக பல பகு­தி­களில் வெள்ள எச்­சரிக்கை விடுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

அப்­பர் பாய லேபார் ரோட்­டுப் பகு­தி­யில் நீர்­மட்­டம் உயர்ந்­த­தா­க­வும் அதிக வெள்­ளம் ஏற்­பட வாய்ப்பு இருப்­ப­தா­க­வும் நேற்று பிற்­ப­கல் சுமார் 4.30 மணிக்கு பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் டுவிட்­ட­ரில் தெரி­வித்­தது.

சுவா சூ காங் அவென்யூ 1க்கும் அதே போன்ற எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் பல இடங்­களில் பிற்­ப­க­லில் கடும் மழை பெய்­யும் என்று முன்­ன­தாக கழ­கம் தெரி­வித்து இருந்­தது.

இந்த வாரம் முழு­வ­துமே மழையை எதிர்­பார்க்­க­லாம் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் முன்னுரைத்து இருக்­கிறது.

பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் விடுக்­கும் வெள்­ளம் தொடர்­பான தக­வல்­க­ளைத் தெரிந்­து­கொள்ள twitter.com/PUBSingapore என்ற முக­வ­ரிக்­குச் செல்­ல­லாம்.