சிங்கப்பூரில் ஜிஎஸ்டி வரி உயர்கிறது. இதனால் பயனீட்டாளர்கள் அதிகம் செலவிடமட்டார்கள் என்று சில்லறை வர்த்தகத் துறையினர் கவலைப்படுகிறார்கள்.
ஜிஎஸ்டி வரி உயர்வு தங்களை மிகவும் பாதித்துவிடும் என்று உணவு, பானத் துறை நிறுவனங்களும் தெரிவித்தன.
எரிசக்தி, போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கின்றன.
இத்தகைய ஒரு நேரத்தில் பயனீட்டாளர்கள் செலவைக் குறைத்துக்கொண்டால் தங்களுக்குப் பாதிப்பு இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சில நிறுவனங்கள் தங்களால் சமாளித்துவிட முடியும் என்று தெரிவித்தன.
குடியிருப்பு வட்டாரங்களில் செயல்படும் சிறிய நிறுவனங்கள், செலவு அளவுக்கு அதிகமாகக் கூடினால் தொழிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என்று கூறின.
ஜிஎஸ்டி வரி இப்போது 7% ஆக இருக்கிறது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 1% அதிகரிக்கும். பிறகு 2024 ஜனவரி 1ஆம் தேதி மேலும் 1% அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

