இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 'ஒன்றுசேர்ந்து முன்னேற்றத்திற்கான புதிய பாதையை அமைப்போம்' என்ற தலைப்பில் சிங்கப்பூரர்களில் வெவ்வேறு பிரிவினருக்கு ஏற்ற ஒரு வரவுசெலவுத் திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார். இது குறித்து, இளையர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்தது இவ்வார
இளையர் முரசு.
மின்னிலக்கத்திற்குக் கல்வித் திட்டங்கள் மாறியுள்ள நிலையில் எனக்கும் என் தம்பிக்கும் அளிக்கப்படும் 'எடுசேவ்' நிதி, குடும்பத்தின் நிதிச் சுமையைக் குறைக்கக்கூடும். கொவிட்-19 சூழலில் அதிகரித்துள்ள வீட்டுச் செலவுகளைக் கருதி நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களும் எங்களுக்குத் துணைபுரியும். ஆனால், வர்த்தகங்கள் தங்களின் பொருள்களின், சேவைகளின் விலைகளை உயர்த்தும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
- சிட்டிபாபு அஸ்வின், 18,
தேசிய தொடக்கக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்

