சொத்து, செல்வ வரிகளை உயர்த்துவதால் நிதி ஆதாரத்தை அதிகப்படுத்தி குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவ முடியும். இவ்வாறு அதிக வருமானம் ஈட்டுவோரின் செல்வத்தைக் குறைந்த வருமானப் பிரிவினருக்கு உதவும் வகையில் செலவிடுவதால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார இடைவெளியை நம்மால் குறைக்க முடியும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், எதிர்காலத்தில் அதிக வருமானம் ஈட்டுவதற்காக உழைக்கும் என்னைப் போன்ற இளையர்களை இந்த வரிச் செலவுகள் மனந்தளர வைக்கலாம். இருப்பினும், பொருளாதார இடைவெளி குறைவது ஒரு தேசமாகவும் சமூகமாகவும் நம்மை உயர்த்தும் என்பதே என் நம்பிக்கை.
- தெ. பிரபு, 23, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம்
கணக்காய்வுத் துறையில் இரண்டாம் ஆண்டு மாணவர்

