தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓசிபிசி வங்கி மோசடி:13 பேர் கைது, 7 பேர் மீது குற்றச்சாட்டு

1 mins read
c6946223-7084-42ab-8e18-b6f05a315541
$35,600 மதிப்புள்ள கைத்தொலைபேசிகள், சிம் அட்டைகள், ரொக்கம், விலை உயர்ந்த கைகடிகாரங்கள் ஆகியவை சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. (படம்: சிங்கப்பபூர்க் காவல் துறை) -
multi-img1 of 3

அண்மையில் ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியின் தொடர்பில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

19 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்ட 9 ஆண்களும், 4 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்க் காவல் துறை நேற்று (பிப்ரவரி 20) அறிக்கை வெளியிட்டது.

இம்மாதம் 16, 17ஆம் தேதிகளில் தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

$35,600 மதிப்புள்ள கைத்தொலைபேசிகள், சிம் அட்டைகள், ரொக்கம், விலை உயர்ந்த கைகடிகாரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஏழு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டு வரை சிறைத்தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

மற்ற ஆறு சந்தேக நபர்களைக் காவல் துறை விசாரித்துவருகிறது.

2020ஆம் ஆண்டு டிசம்பர், சென்ற ஜனவரி ஆகிய மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மோசடியில், 790 வாடிக்கையாளர்கள் 13.7 மில்லியன் வெள்ளியை இழந்தனர்.