போதைப் பொருள் நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட சந்தேகத்தின்பேரில் மூவரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அப்பர் புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து பல்வேறு போதைப் பொருள்கள், மின்சிகரெட்டுகள் அவை தொடர்பான சாதனங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சுமார் 1400 மின்சிகரெட்டுகள், 78,000 மேற்பட்ட புகையிலை குச்சிகள் மற்றும் பல சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றின் மொத்த மதிப்பு சுமார் $700,000 என அதிகாரிகள் தெரிவித்தனர்.
30 வயது மதிப்பதக்க அந்த மூன்று ஆடவர்களை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.