ஓமிக்ரான் பரவலைச் சமாளிக்க இந்தோனீசியாவிற்கு உதவி

ஓமிக்ரான் பரவலைச் சமாளிக்க இந்தோனீசியாவிற்கு உதவி

1 mins read
fe6e6d64-07ce-44c3-bd61-7373e8210e72
சிங்கப்பூருக்கான இந்தோனீசியத் தூதர் சூர்யோ பிரதோமோவிடம் (வலது) சிங்கப்பூரின் நன்கொடைகளை வழங்குகிறார் தெமாசெக் அனைத்துலக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெனடிக்ட் சியோங். படம்: இந்தோனீசியத் தூதரகம் -

ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைச் சமா­ளிக்க இந்­தோ­னீ­சி­யா­விற்கு உத­வும் வித­மாக $18.8 மில்­லி­யன் மதிப்­பு­மிக்க மருத்­து­வக் கரு­வி­க­ளை­யும், மருந்­துப் பொருள்­க­ளை­யும் சிங்­கப்­பூர் நேற்று வழங்­கி­யது.

தெமா­செக் அனைத்­து­லக அற­நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி பென­டிக்ட் சியோங், 697 செயற்கை சுவா­சக் கரு­வி­க­ளை­யும், ஒரு மில்லி­யன் முகக்கவ­சங்­க­ளை­யும் சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தோ­னீ­சி­யத் தூதர் சூர்யோ பிர­தோ­மோ­வி­டம் வழங்­கி­னார்.

அவற்­றில் 418 செயற்கை சுவாசக் கரு­வி­களும் 600,000 முகக் கவ­சங்­களும் இந்­தோ­னீ­சிய ராணு­வத்­திற்கு வழங்­கப்­பட்­டன. எஞ்­சி­ய­வற்றை மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் அந்­நாட்­டுக் காவல்­துறை விநி­யோ­கம் செய்யும்.

கிரு­மிப் பர­வ­லைச் சமா­ளிக்­கப் பல்­வேறு தரப்­பி­ன­ரின் கூட்டு முயற்சி தேவை என்­றும் அதற்­கு எ­தி­ரான போராட்­டத்­தில் சமூ­கத்தை வலுப்­ப­டுத்­து­வதே முக்­கிய அம்­சம் என்­றும் திரு பென­டிக்ட் கூறி­ய­தாக இந்­தோ­னீ­சி­யத் தூத­ரக அறிக்கை தெரி­வித்­தது.

தெமா­செக் அற­நி­று­வ­னம் இந்­தோ­னீ­சி­யா­விற்கு வழங்­கி­வ­ரும் தொடர் ஆத­ர­வுக்­குத் தூதர் சூர்யோ பிர­தோமோ நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்று முன்­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழமை புதி­தாக 48,484 பேருக்கு கொரோனா தொற்று உறு­தி­யா­னது; மேலும் 163 பேர் மாண்­டு­போ­யி­னர். அந்­நாட்­டில் மொத்­தம் 5.2 மில்­லி­யன் பேர் கொவிட்-19ஆல் பாதிக்­கப்­பட்­டு­விட்­ட­னர். அத­னால் 146,000க்கும் மேற்­பட்­டோர் இறந்­து­விட்­ட­னர்.

கிரு­மிப்­ப­ர­வல் தொடங்­கி­ய­தில் இருந்தே சிங்­கப்­பூர் பல வழி­க­ளி­லும் இந்­தோ­னீ­சி­யா­விற்கு உத­விக்­கரம் நீட்டி வரு­வது குறிப்­பி­டத்­தக்கது.