குற்றவியல் வழக்குகளுக்கு விரைவுத் தீர்வு

குற்றவியல் வழக்குகளுக்கு விரைவுத் தீர்வு

2 mins read
670f5717-c579-4cad-a1ff-98d028b2bc35
காவல்துறையின் ஏழு தரைப் பிரிவுகளிலும் போக்குவரத்து காவல் துறையிலும் சுமார் 30 அரசு துணை வழக்கறிஞர்கள் அமர்த்தப்பட்டு உள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

காவல்துறை தரைப் பிரிவுகளில், போக்குவரத்து காவல் துறையில் ஏறக்குறைய 30 அரசு தரப்பு வழக்கறிஞர்கள் செயல்படுகிறார்கள்

காவல்­துறை பிரி­வு­களில் அர­சாங்க வழக் கறிஞர்­களை அமர்த்­தும் ஒரு செயல்­திட்டம் சென்ற ஆண்­டில் தொடங்­கப்­பட்­டது. இதன் கார­ண­மாக வழக்­கு­க­ளுக்கு விரை­வாக தீர்வு காண முடி­கிறது.

இந்த ஏற்­பாட்­டின் மூலம், அரசு தரப்பு வழக்கறிஞர்­கள், புலன்­வி­சா­ரணை ஆவ­ணங்­க­ளைப் பரி­சீ­லிக்­க­வும் புலன்­விசா­ரணை அதி­கா­ரி­க­ளி­டம் விவ­ரங்­க­ளைத் தாக்­கல் செய்­ய­வும் ஆகும் நேரம் குறை­வதாக அர­சாங்க தலைமை வழக்கறிஞர்­ டான் கியட் பெங் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

பெரும்­பா­லான வழக்­கு­க­ளுக்­குத் தீர்வு காணும் ஆற்­றல் 50 விழுக்­காட்­டுக்­கும் மேற்பட்ட அள­வுக்குக் கூடி இருக்­கிறது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

வழக்­கு­க­ளுக்கு விரை­வில் தீர்வு ஏற்­படு­வ­தால், சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­கள் எல்­லா­வற்­றை­யும் வேக­மாக முடித்­துக்கொள்­ள­வும் பதற்­றம், பர­ப­ரப்பு முன்னதாகவே முடிவுக்கு வர­வும் வழி ஏற்­ப­டு­வ­தாக அவர் மேலும் தெரி­வித்­தார்.

இந்­தச் செயல்­திட்­டத்­திற்கு "அரசு வழக்கறிஞர்­ அலு­வ­ல­கம்' என்று பெயர்.

தலை­மைச் சட்ட அதி­காரி லூசி­யன் வோங் கடந்த ஜன­வ­ரி­யில் சட்ட ஆண்டை தொடங்கி வைத்­த­போது இது­பற்றி குறிப்­பிட்டு இருந்­தார்.

இச்­செ­யல்­திட்­டம் கடந்த ஜூலை­யில் தொடங்­கப்­பட்­டது.

இதன்­படி ஏழு காவல்­துறை தரை பிரி­வு­க­ளி­லும் போக்­கு­வ­ரத்து காவல்­துறை யிலும் ஏறக்­கு­றைய 30 அரசு துணை வழக்கறிஞர்­­கள் அமர்த்­தப்­பட்டு உள்­ள­தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்­ணிக்கை, தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­றும் மொத்த வழக்கறிஞர்­களில் கிட்­டத்­தட்ட 15 விழுக்­கா­டா­கும். முன்­பெல்­லாம், காவல்­துறை புலன்­விசாரணை அதி­கா­ரி­கள், தங்­கள் புலன்­வி­சா­ரணை ஆவ­ணங்­களைத் தலை­மைச் சட்ட அதிகாரி அலு­வ­ல­கத்­திற்கு அனுப்பி வந்­த­னர்.

பிறகு அந்­தக் கோப்­பு­க­ளைப் பரி­சீ­லிக்க வழக்கறிஞர்­கள் அமர்த்­தப்­ப­டு­வார்­கள்.

அவ­சர வழக்­கு­க­ளைப் பொறுத்­த­வரை புலன்­வி­சா­ரணையாளர்­கள் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­திற்­குச் சென்று அங்­கி­ருக்­கும் துணை வழக்­கு­ரை­ஞ­ரு­டன் ஆலோ­சிப்பது வழக்கமாக இருந்து வந்தது.இப்போது இந்த ஏற்பாடு மாறியுள்ளது.