சுற்றுச்சூழல் ஆய்வுக்கு $10 மில்லியன்

சுற்றுச்சூழல் ஆய்வுக்கு $10 மில்லியன்

1 mins read
924cfa4d-3357-4022-b8a8-e058481495ff
-

சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் கல்விக்காக அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் $10 மில்லியன் ஒதுக்கும்.

சிறந்த வடிவமைப்பு மூலம் உலகிற்குப் பொருத்தமான சுற்றுச்சூழல் தீர்வுகளைக் காண்பதற்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது என்று அந்த உயர் கல்வி நிலையத்தின் தலைவர் பேராசிரியர் சோங் டோ சோங் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையை வாழ மக்களுக்கு ஊக்கமூட்டக்கூடிய அம்சங்கள் எவை என்பது பற்றியும் புரிந்துகொள்ள ஏதுவாக இந்தப் பல்கலைக்கழகம் ஆய்வுகளை நடத்தும்.