கூட்டுரிமை வீட்டு பாதுகாவலர் மீது மூன்று குற்றச்சாட்டுகள்

கூட்­டு­ரிமை வீடு ஒன்­றில் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த மூத்த பாது­கா­வ­லர் ஒரு­வர், சீருடை அணி­யாத காவல்­துறை அதி­காரி போல நடித்து ஏமாற்­றிய சம்­ப­வம் தொடர்­பில் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளார்.

33 வய­தா­கும் கணே­சன் குண­சே­க­ரன் கையூட்டு பெற்­றுக்­கொண்டு, 'டிரேஸ்­டு­கெ­தர்' செய­லி­யைப் பயன்­ப­டுத்­தா­மலே கூட்­டு­ரிமை வீட்­டுக்­குள் செல்ல ஓர் ஆட­வரை அனு­ம­தித்­தா­க­வும் கூறப்­பட்­டது. அத்­து­டன் ஆட­வரை மிரட்­டிப் பத்­தா­யி­ரம் வெள்ளி பணம் பறித்­த­தா­க­வும் அவர்­மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது.

வெஸ்ட் கோஸ்ட் பகு­தி­யில் அமைந்­தி­ருக்­கும் சீஹில் கூட்­டு­ரிமை வீட்­டிற்­குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்­த­தா­க­வும், அங்­குள்ள கழிப்­ ப­றை­யில் மாண­வ­ரு­டன் பாலி­யல் உறவு கொண்­ட­தா­க­வும் விசா­ரணை நடத்­தப்­போ­வ­தா­கக் கூறி ஆட­வ­ரி­டம் கணே­சன் பணம் பறித்­தார்.

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான கணே­சன் மீது நேற்று மாவட்ட நீதி­மன்­றத்­தில், காவல்­துறை அதி­காரி போல் வேட­மிட்­டது, ஊழல், மிரட்­டிப் பணம் பறித்­தது ஆகிய மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

மலே­சி­ய­ரான அவர், சென்ற ஆண்டு அக்­டோ­பர் 19ஆம் தேதி பாதிக்­கப்­பட்ட ஆட­வ­ரி­டம் தாம் சீருடை அணி­யாத காவல்­துறை உய­ர­தி­காரி என்று சொன்­ன­தா­கக் கூறப்­பட்­டது.

குற்­றங்­கள் புரிந்­த­போது கணே­சன், மெட்­ரோ­பொ­லிஸ் பாது­கா­வல் நிறு­வ­னத்­தின் மூத்த பாது­கா­வல் அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்­றி­னார் என்று லஞ்ச ஊழல் புல­னாய்­வுப் பிரிவு நேற்று தெரி­வித்­தது.

தம்மை பிணை­யில் விடு­விப்­ப­தற்­கான மனு­வை கணே­சன் சமர்ப்­பிக்­க­வில்லை என்­ப­தால் அவர் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டார். மார்ச் 23ஆம் தேதி அவர் மீண்­டும் நீதி­மன்ற விசா­ர­ணையை எதிர்­நோக்­கு­வார்.

காவல்­துறை அதி­கா­ரி­யைப் போல் வேட­மிட்­ட­தற்கு $2,500 வரை­யி­லான அப­ரா­தமோ, ஆறு மாதம் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ, இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.

மற்ற இரு குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கும் மொத்­தம் பத்­தாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­டனை, $100,000 வரை­யி­லான அப­ரா­தம், பிரம்­படி ஆகி­யவை விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!