ஓசிபிசி மோசடி: கைதான எழுவரில் நால்வர் மற்ற குற்றங்களையும் புரிந்துள்ளனர்

ஓசிபிசி மோசடி: கைதான எழுவரில் நால்வர் மற்ற குற்றங்களையும் புரிந்துள்ளனர்

2 mins read
98ca9368-b429-44cf-be8d-c011418b42d7
-

ஓசி­பிசி வங்கி வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் குறி­வைத்து மோச­டி­யில் ஈடு­பட்­ட­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்ட ஏழு இளை­யர்­களில் நான்கு பேர், கொள்ளை, கல­வ­ரம் உட்­பட, பிற குற்­றங்­களில் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த ஆண்டு டிசம்­ப­ரில் குற்­றச்செயல்­க­ளை மறைக்க மற்­ற­வர்­களுக்கு உத­வி­ய­தாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஏழு பேர் மீதும் தலா ஒரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

ஐவ­ருக்கு இப்­போது 19 வய­தா­கிறது. ஜோவன் சோ ஜுன் யான், பிரேய்­டன் செங் மிங் யான், முகம்­மது கைரு­டின். இதர இரண்டு பேர் குற்­றம் புரி­யும்­போது 18 வய­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளாக இருந்­த­தால் அவர்­க­ளின் பெயர்­களை வெளி­யிட தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

20 வயது லியோங் ஜுன் சியான், 21 வயது லிம் கை ஸீ ஆகி­யோர் மற்ற இரு­வர். கைரு­டின், செங், லிம் ஆகி­யோர் மீது தலா ஒரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. ஊழல், போதைப் பொருள் கடத்­தல், இதர கடு­மை­யான குற்­றங்­கள் (சிடி­சிஏ) சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ள­னர்.

மற்ற நால்­வர்­க­ளான சோ, லியோங் மற்­றும் பெயர் குறிப்­பிட முடி­யாத இரண்டு பதின்ம வய­தி­னர் ஒவ்­வொ­ரு­வ­ரும் சிடி­சிஏ சட்­டத்­தின்­படி மூன்று முதல் பத்து குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். மேலும் அவர்­கள் மீது கொள்­ளை­ய­டித்­தல் போன்ற குற்­றங்­களும் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

பெயர் குறிப்­பிட முடி­யாத 19 வயது இளை­யர் மீது­தான் ஆக அதி­க­மாக பத்து குற்­றச்­சாட்­டு­கள் சாட்­டப்­பட்­டுள்­ளன.

2020, ஜூன் 9ஆம் தேதி, பற்று அட்­டை­யைத் தவ­றா­கப் பயன்­படுத்­திய முதல் குற்­றத்தை அவர் புரிய தொடங்­கி­ய­போது அவ­ருக்கு வயது 17தான். கடந்த ஆண்டு மே 17ஆம் தேதி கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக் காலத்­தில் சட்­டத்­துக்­குப் புறம்­பாக அந்த இளை­யர் சிமெய் புளோக்­கின் வெற்­றுத்­தளத்­தில் மேலும் மூவ­ரைச் சந்­தித்­துள்­ளார்.

குற்­றம் சாட்­டப்­பட்ட எழு­வ­ரின் வழக்­கு­களும் இம்­மா­தம் 25ம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அண்­மைய ஓசி­பிசி வங்கி வாடிக்­கை­யா­ளர்­களை ஏமாற்­றிய குற்­றங்­களில் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற சந்­தே­கத்­தின் பேரில் இது­வரை கைதான 13 பேர் 19 வய­துக்­கும் 22 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

இதற்கு முன்­ன­தாக காவல்­துறை வெளி­யிட்ட அறிக்­கை­யில் கைதான 13 பேரில் ஒன்­பது ஆண்­களும் நான்கு பெண்­களும் இருந்­த­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

மொத்­தத்­தில், கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தி­லும் கடந்த மாதத்­தி­லும் வங்­கிக் கணக்கு தொடர்­பான மோச­டி­களில் சிக்­கிய 790 பேர் $13.7 மில்­லி­ய­னைப் பறிக் கொடுத்­துள்­ள­னர்.