சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை திங்கள்கிழமை (பிப்ரவரி 21) நிலவரப்படி 13,623ஆக இருந்தது.
ஒப்புநோக்க ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 15,283 பேருக்குத் தொற்று உறுதியானது.
நேற்றைய நிலவரப்படி 1,606 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அதற்று முந்தைய இந்த எண்ணிக்கை 1,523ஆக இருந்தது.
மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து பதினேதழாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 198 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 44 பேர் உள்ளனர்.
கொவிட்-19க்கு மேலும் ஏழு பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 147 பேருக்குத் தொற்று உறுதியானது.
வாராந்திர தொற்று விகிதம் சற்று அதிகரித்து திங்கள்கிழமை 1.62ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அது 1.59ஆக இருந்தது


