ஜுரோங் வட்டாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்திலிருந்து தீர்வை செலுத்தப்படாத 1,000க்கு மேற்பட்ட கள்ளச் சிகரெட் பெட்டிகளும், 2,000க்கும் மேலான கள்ளச் சிகரெட் பொட்டலங்களும் சிக்கின.
இதன் தொடர்பாக 37 வயதான சீன நாட்டு ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் ஜுரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 93ல் மேற்கொண்ட சோதனையில், கள்ளச் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கருப்பு குப்பைப் பைகளில் சிகரெட்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தாக சிங்கப்பூர் சுங்கத் துறை கூறியது.
இவற்றுக்கான செலுத்தப்படாத ஒட்டு மொத்த வரியின் மதிப்பு $123,070 என்றும் செலுத்தப்படாத பொருள், சேவை வரியின் மதிப்பு $9,790 என்றும் ஆணையம் குறிப்பிட்டது.