நீதிமன்ற அவமதிப்பு:எம். ரவிக்கு எதிராக குற்றச்சாட்டு

1 mins read
510ac892-a9b2-437c-ae6f-315be12c0bcd
(படம்:ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கறிஞர் எம். ரவிக்கு எதிராக அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் குற்றச்சாட்டியுள்ளது.

திரு ரவியின் நடத்தைக் குறித்து அரசு மற்றும உயர் நீதிமன்றங்கள் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துக்குக் கொடுத்த புகார்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் இன்று (பிப்ரவரி 22) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அரசு மற்றும உயர் நீதிமன்றங்களில் இடம்பெற்ற விசாரணைகளின்போது திரு ரவி அவமரியாதையாக நடந்துக்கொண்டதாகக் கூறப்பட்டது.

சம்பளப் பிரச்சினை தொடர்பில் பேருந்து ஓட்டுநர்கள் ஐவர், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் மீது தொடுத்துள்ள வழக்கு, மகேந்திரன் முனியாண்டி என்பவருக்கு எதிரான குற்றவியல் வழக்கு ஆகியவற்றின் நீதிமன்ற விசாரணைகளின்போது திரு ரவி நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் நடந்துகொண்டதாக கூறப்பட்டது.

திரு ரவியின் நடத்தைக் குறித்து வழக்கறிஞர்கள் சங்கத்துக்கும் புகார் அளித்திருப்பதாகவும் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் கூறியது.

இந்த நடவடிக்கை தாம் எதிர்பார்த்ததுதான் என்று ரவி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்