மருத்துவச் சான்றிதழை கேட்க வேண்டாம்: டான்

மருத்துவச் சான்றிதழை கேட்க வேண்டாம்: டான்

2 mins read
a81603f4-3782-4250-bc74-024d7b5c1762
-

ஓமிக்­ரான் அலை­யால் தொற்று அதி­க­ரித்து, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்பு நெருக்­க­டியை எதிர்­நோக்­கும் வேளை­யில் இங்­குள்ள அனைத்து முத­லா­ளி­களும் கொவிட்-19 உறுதி செய்­யப்­பட்ட தங்­க­ளது ஊழி­யர்­க­ளி­டமிருந்து மருத்­துவச் சான்­றி­தழைக் கேட்க வேண்­டாம் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது நடப்­பில் உள்ள கொவிட்-19 தொடர்­பான சுகா­தா­ரப் விதி­மு­றை­களை முத­லா­ளி­களும் நிறு­வ­னங்­க­ளின் மனி­த­வ­ளத் துறை­யும் நன்கு தெரிந்து வைத்­தி­ருப்­ப­து­டன், பாதிக்­கப்­பட்ட நாள்­களில் வேலை­யி­டத்­திற்­குத் திரும்ப ஊழி­யர்­க­ளுக்கு விலக்கு அளிக்க வேண்­டும் என்று நேற்று அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறினார்.

ஹேவ்­லாக் ரோட்­டில் உள்ள மனி­த­வள அமைச்­சின் தலை­மை­ய­கத்­தில் நேற்று அவரை செய்­தி­யா­ளர்­கள் சந்­தித்­த­னர்.

தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றிய பின்­னர் வேலைக்­குத் திரும்­பும் ஊழி­யர்­க­ளி­டம் மருத்­து­வ­ரின் மதிப்­பீட்­டையோ குண­ம­டைந்­த­தற்­கான மருத்­து­வக் குறிப்­பையோ கேட்கவேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­றார் அமைச்­சர்.

அதிகாரத்­துவ தொற்று ஆவ­ணத்­தைப் பெற விரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­கள் கண்­கா­ணிப்­பின்கீழ் நடத்­தப்­படும் ஆண்­டி­ஜென் விரை­வுப் பரி­சோ­த­னைக்கு முன்­ப­திவு செய்து­ கொண்டு செல்ல வேண்­டும்.

இங்கு ஏற்­கெ­னவே செய­லில் உள்ள ஏதே­னும் ஓர் ஏஆர்டி நிலை­யத்­தில் அவர்­கள் அந்­தப் பதி­வைச் செய்­து­கொள்­ள­லாம். அல்­லது தீவு முழு­வ­தும் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்ள விரை­வுப் பரி­சோ­தனை நிலை­யத்­திற்கு அவர்­கள் செல்­லாம்.

இவற்­றில் செய்­யப்­படும் பரி­சோ­த­னை­க­ளுக்கு மார்ச் 15 முதல் அர­சாங்­கம் முழு­மை­யாக நிதி­ய­ளிக்­கும். பரி­சோ­தனை செய்­து­கொண்ட 30 நிமி­டங்­க­ளுக்­குள் அவர்­க­ளின் 'ஹெல்த்­ஹப்' செய­லி­யில் பரி­சோ­தனை முடிவு பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டு­வி­டும்.

பரி­சோ­தனை நிலை­யங்­களில் கண்­கா­ணிப்­பின்­கீழ் நடத்­தப்­படும் ஏஆர்டி பரி­சோ­த­னையை மேற்­கொள்­வோ­ரின் கைபே­சிக்­கு குறுந்­ த­க­வல் வாயி­லா­க­வும் முடிவு அறி­விக்­கப்­படும். நோய் தொற்­றி­ய­தற்­கான சான்­றாக அவர்­கள் அத­னைப் பயன்­ப­டுத்­திக்கொள்­ள­லாம்.

இதனை விளக்­கிய டாக்­டர் டான், இப்­போ­தைய நிலை­யில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்பு நெருக்­க­டிக்கு ஆளா­வதை உண­ர­மு­டி­வ­தா­க­வும் குறிப்­பாக பொது மருத்­து­வர்­க­ளின் மருந்­த­கங்­கள், பல­துறை மருந்­த­கங்­கள் மற்­றும் அவ­ச­ர­கால மருத்­து­வத் துறை­கள் போன்­ற­வற்­றில் நெருக்­கடி நன்­றாக உண­ரப்­ப­டு­வ­தா­க­வும் கூறி­னார்.

"தங்­களை நாடி வரும் பெரும்­பா­லான நோயா­ளி­க­ளி­டம் இலே­சான அறி­கு­றி­கள் காணப்­ப­டு­கின்­றன அல்­லது அறி­கு­றி­களே காணப் ­ப­டு­வ­தில்லை என பொது மருத்­து­வர்­களும் அவ­ச­ர­கால மருத்­து­வத் துறை­யி­ன­ரும் கூறு­கி­றார்­கள்.

"இந்த நிலை­யில் மருத்­து­வச் சான்­றி­தழ்­க­ளைப் பெறு­வ­தற்­காக மட்­டும் பல நோயா­ளி­கள் வரு­வ­தா­க­வும் மருத்­து­வர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். வேலை­யி­டத்­தில் அவ­சி­யம் காட்டவேண்­டும் என்­ப­தற்­காக அவர்­கள் அச்சான்­றி­த­ழைப் பெற மருத்­து­வர்­களை நாடு­கி­றார்­கள். இது தேவை­யற்­றது என்­பதை வலி­யு­றுத்த விரும்­பு­கி­றேன்," என்றார் டாக்டர் டான். மருந்தகங்கள் முன்பு நீண்ட வரிசை காணப்படுவதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து தாம் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்வதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்து