நாட்காட்டியில் 22/2/22 என்று நேற்று தோன்றிய நாளை மேலும் சிறப்புக்குரியதாக ஆக்கும் வகையில் சிங்கப்பூ ரில் 500க்கும் மேற்பட்டோர் மணமுடிக்க முடிவு செய்தி ருந்ததாக கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் திங்கட்கிழமை தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். முன்வரிசை, பின்வரிசை என்று எப்படிப் படித்தாலும் ஒரேமாதிரியாக வரக்கூடிய இந்த தேதி வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வரக்கூடியது.
மேலும், எல்லா எண்களும் இரட்டைப்படை என்பதால் இது வெற்றியைக் குறிக்கும் நாள் என சீனர்கள் பலர் நம்புகிறார்கள். இந்தச் சிறப்புகளுடன் நேற்றைய நாள் செவ்வாய்க் கிழமை என்பதும் சந்திர முறை நாட்காட்டியில்
22வது நாளைக் குறிப்பதாக வும் நேற்று திருமண உறுதி எடுத்துக்கொண்ட டிலேன் லின் என்பவர் கூறினார்.
திருமணத்தை நடத்தி வைக்கும் திருவாட்டி ஜோனா போர்டில்லா போன்ற அதிகாரிகளுக்கான தேவை நேற்றைய தினம் அதிகமாக இருந்தது. திருவாட்டி ஜோனா மட்டும் நேற்று ஒரே நாளில் 11 திருமணங்களை நடத்தி வைக்க வேண்டி இருந்தது. தமது 15 ஆண்டுகால திருமணச் சேவையில்
இது தமது சொந்த
சாதனை என்றார் அவர்.

