மேல்­நி­லைத் தேர்­வு­களில் 93.5% மாண­வர்­கள் தேர்ச்சி

மேல்­நி­லைத் தேர்­வு­களில் 93.5% மாண­வர்­கள் தேர்ச்சி

1 mins read
dd56486d-322e-4894-aefa-e2279117e8cf
-

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு இடை­யி­லும், சென்ற ஆண்டு பொதுக் கல்­விச் சான்­றி­த­ழுக்­கான (ஜிசிஇ) மேல்­நி­லைத் தேர்­வு­களை எழு­திய மாண­வர்­களில் 93.5 விழுக்­காட்­டி­னர் தேர்ச்சி பெற்­றுள்­ள­னர்.

மொத்­தம் 11,070 மாண­வர்­கள் தேர்வு எழு­தி­ய­தா­க­வும் அவர்­களில் 10,353 பேர் தேர்ச்சி பெற்­ற­தா­க­வும் கல்வி அமைச்­சும் சிங்­கப்­பூர்த் தேர்­வு­கள், மதிப்­பீட்­டுக் கழ­க­மும் வெளி­ யிட்ட கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது.

சென்ற ஆண்­டு­டன் ஒப்­பு­நோக்க இந்த முறை தேர்ச்சி விகி­தம் 0.1 விழுக்­காடு குறைவு.

சிங்­கப்­பூ­ரின் தன்­னாட்சி பெற்ற பல்­க­லைக்கழ­கங்­களில் மாண­வர் சேர்க்­கைக்­கும், உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்­கும் விண்­ணப்­பிக்­கும் மாண­வர்­கள் இணை­யம் வழி விண்­ணப்­பிக்­க­லாம்.

பல­து­றைத் தொழில்­நுட்­பக் கல்­லூ­ரி­க­ளின் சுமார் 120 பாடத் திட்­டங்­களில் சேர்ந்து பயில்­வோர், ஓராண்­டுக்கு முன்பே பட்­ட­யம் பெறும் வகை­யில் பாடத்­திட்­டம் சுருக்­கப்­பட்­டுள்­ளது.

அவர்­கள் பிப்­ர­வரி 22 முதல் மார்ச் 7 வரை அதற்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

கல்வி, வேலை­வாய்ப்பு வழி­காட்­டு­த­லைப் பெற விரும்­பும் மாண­வர்­கள் பள்­ளி­களில் செயல்­படும் ஆலோ­ச­கர்­களை நாட­லாம்.

'மைஸ்­கில்ஸ்­ஃபி­யூச்­சர்' இணை­ய­வா­ச­லி­லும் மேல் விவ­ரங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

அல்­லது 68311420 என்ற தொலை­ பேசி எண்­ணையோ MOE_ECG@moe.gov.sg என்னும் மின்­னஞ்­சல் முக­வ­ரி­யையோ தொடர்­பு­கொள்­ள­லாம்.