அரசாங்க ரகசியத்தை வெளியிட்டு விளையாடியவருக்குச் சிறை

அரசாங்க ரகசியத்தை வெளியிட்டு விளையாடியவருக்குச் சிறை

2 mins read
e93a70ed-c99e-4041-8457-f8742fa5dc8b
குற்றவாளி சாவ் செங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுகா­தார அமைச்­சின் தரவு நிர்­வாகப் பிரி­வின் துணைத் தலை­வராக இருந்த சாவ் செங்­கிற்கு 18 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. கொவிட்-19 கிருமித்­தொற்­றுக்கு ஆளா­னோ­ரின் எண்­ணிக்­கையை நிர்­ண­யிக்­கப்­பட்ட நேரத்­திற்கு முன்­னரே 'வீசேட்' குறுந்­த­க­வல் செய­லி­யில் தான் உட்பட 50 பேர் இருந்த குழு­விற்கு இவர் அனுப்­பி­யி­ருக்­கி­றார்.

மேலும், தக­வலை வெளி­யி­டு­வதற்கு முன்­னர் சரி­யான கிரு­மித்­தொற்று சம்­பவ எண்­ணிக்­கையை முன்­வைக்­கும் போட்­டி­யைக் கொண்ட விளை­யாட்­டி­லும் குழு­வில் இருந்­த­வர்­க­ளு­டன் சாவ் ஈடு­பட்­டி­ருக்­கி­றார். ஏறக்­கு­றைய சரி­யான எண்­ணிக்­கை­யைத் தெரி­விப்­ப­வரை இவர் பாராட்­டி­யி­ருக்­கிறார். சில­ருக்கு வெகுமானமாக ஒரு யுவான் (20 சிங்­கப்­பூர் காசு) தொகை­யை­யும் வழங்­கி­யி­ருக்­கி­றார்.

37 வயது சாவ், அர­சாங்க ரக­சிய சட்­டத்­தின்­கீழ் தன் மீது சுமத்­தப்­பட்டிருந்த 11 குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ர­ரான இவர், கணி­னி­யின் தவ­றான பயன்­பாட்­டுக்­கான சட்­டத்­தின்­கீழ் தன் மீது சுமத்­தப்­பட்ட ஒரு குற்­றச்­சாட்­டை­யும் ஒப்­புக்­கொண்­டார்.

இதே 'வீசேட்' குழுவி­லி­ருந்த மற்­றொ­ரு­வ­ரான 36 வயது டேங் லின்­னுக்­குச் சென்ற ஆண்டு $10,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. அர­சாங்க ரக­சிய சட்­டத்­தின்­கீழ் தன் மீது சுமத்­தப்­பட்ட ஐந்து குற்றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

சாவ் தற்போது தங்களிடம் வேலை செய்யவில்லை என்று சுகாதர அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் காவல்­துறை விசா­ர­ணை­யைத் தொடங்­கி­விட்­ட­தாக சுகா­தார அமைச்­சுக்­குத் தக­வல் வந்­தது. அமைச்­சின் ரக­சிய தக­வல்­க­ளைத் தெரிந்­து­கொள்ள சாவிற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த அதி­கா­ர­மும் மீட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. இவற்றுக்குப் பிறகு 2020ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் இவர் தற்­கா­லி­கப் பணி­நீக்கம் செய்­யப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

"இச்சம்­ப­வத்­திற்­குப் பிறகு சுகா­தார அமைச்சு அதன் தக­வல் பாது­காப்பு விதி­மு­றை­க­ளை­யும் செயல்­மு­றை­க­ளை­யும் மறு­ப­ரி­சீ­லனை செய்து முடுக்­கி­விட்­டுள்­ளது," என்­றும் அந்­தப் பேச்­சா­ளர் குறிப்பிட்டார்.