தங்ளின் கடைத்தொகுதி $868 மில்லியனுக்குக் கைமாறியது

தங்ளின் கடைத்தொகுதி $868 மில்லியனுக்குக் கைமாறியது

1 mins read
c8991b85-8b19-4ace-b81a-0f8ba27f8389
கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ் -

ஆர்ச்சர்ட் சாலையின் ஆகப் பழைய சில்லறை விற்பனைத் தலங்களின் ஒன்றான தங்ளின் கடைத்தொகுதியை, ராயல் கோல்டன் ஈகிள் நிறுவனம் $868 மில்லியனுக்கு வாங்கியுள்ளது.

எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அது 10% அதிகமான தொகை என்று கூறப்பட்டது.

முன்னதாக $828 மில்லியனுக்கு அதனை விற்க முன்மொழியப்பட்டிருந்தது. ராயல் கோல்டன் ஈகிள் நிறுவனம் அதைவிட $40 மில்லியன் அதிகம் கொடுத்து இடத்தைக் கையகப்படுத்தியுள்ளது.

313,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட தங்ளின் கடைத்தொகுதியில் மொத்தம் 364 கடைகள் உள்ளன. 12 மாடிகளும், இரண்டு நிலத்தடித் தளங்களும், இணைப்பாக எட்டு மாடி கார் நிறுத்துமிடமும் அதில் உண்டு.

தங்ளின் கடைத்தொகுதி, இறையிலி (freehold) வர்த்தக இடம் என்பது அதன் சிறப்பம்சம். அதனால் அந்த இடத்தை வாங்குவதற்குக் கடுமையான போட்டி இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்தோனீசியச் செல்வந்தரான சுகான்டோ டனோட்டோவிற்குச் சொந்தமான பசிஃபிக் ஈகிள் சொத்துச் சந்தை நிறுவனம், ஏற்கெனவே கிரேக் சாலையில் உள்ள சைனாடவுன் பிளாசா கட்டடத்தை வாங்கி அங்கு சொகுசு ஹோட்டல் ஒன்றைக் கட்டியுள்ளது.