இந்தியாவுக்கான தடுப்பூசிப் பயணப் பாதை மேம்படுத்தப்படவுள்ளது

இந்தியாவுக்கான தடுப்பூசிப் பயணப் பாதை மேம்படுத்தப்படவுள்ளது

1 mins read
7cb22adb-5a0e-42e7-aec1-d705fcb673c8
-

இந்­தி­யா­வுக்­கான தடுப்­பூ­சிப் பய­ணப் பாதை­யில் அனு­ம­திக்­கப்­படும் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை மீண்­டும் பழைய நிலைக்கு உயர்த்­தப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யீ காங் கூறி­யுள்­ளார். பொது மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் பணி­யாற்­றும் மருத்­து­வப் பணி­யா­ளர்­க­ளுக்­கு திரு ஓங் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று எழு­திய கடி­தத்­தில் இதைத் தெரி­வித்­தார்.

வெளி­நாட்டு மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் நாடு திரும்பி தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளைப் பார்க்க அது உத­வும் என்­றும் அவர்­கள் சிங்­கப்­பூர் வந்த பிறகு தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யில்லை என்­றும் அமைச்­சர் கூறி­னார். அதன் பொருட்டு பிலிப்­பீன்­சு­டன் சிங்­கப்­பூர் தடுப்­பூ­சிப் பய­ணப் பாதையை அமைக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மருத்­து­வப் பணி­யா­ளர்­க­ளின் மீதான பணிச்­சு­மை­யை­யும் அழுத்­தத்­தை­யும் குறைக்க அர­சாங்­கம் எடுக்­க­வுள்ள பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளைப் பற்­றித் திரு ஓங் விளக்­கி­னார். மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் வரும் நாள்­களில் எடுத்­துக்­கொள்­ளும் மருத்­துவ விடுப்பை மருத்­து­வ­மனை விடுப்­பா­க­வும் பதிந்­து­கெ­ாள்­ள­லாம் என்று அவர் சொன்­னார்.

இதன்­படி, மருத்­து­வப் பணி­யாளர்­க­ளின் மருத்­துவ விடுப்பு முடிந்­து­விட்­டால் அவர்­கள், சம்­ப­ள­மில்லா விடுப்பு எடுத்­துக்­கொள்­ளத் தேவை­யில்லை. சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை ஊழி­யர்­கள் சங்­கத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் திரு ஓங் கூறி­னார்.

நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கையை மேலும் குறைக்க, மித­மான அறி­கு­றி­கள் உள்­ள­வர்­கள் வீடு­களில் குண­ம­டை­வ­தை­யும் ஊக்­கு­விக்­கும் பொதுச் செய்­தி­கள் பரப்­பப்­படும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

அத்­து­டன், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான ஊழி­யர்­கள் மருத்­துவ விடுப்­புச் சான்­றி­தழ்­க­ளைக் கட்­டா­யம் சமர்ப்­பிக்­கும்­படி கேட்­க­வேண்­டாம் என்று முத­லா­ளி­க­ளி­டம் எடுத்­து­ரைக்­கப்­படும்.