சிங்டெல் நிறுவனம், 31 எக்சீட்டர் ரோட்டில் அமைந்துள்ள தனது கம்சென்டர் தலைமையகத்தை $2 பில்லியனுக்கும் அதிக செலவில் கூட்டாக மறுபடியும் உருவாக்கும். அந்தச் செலவில் நிலத்துக்கான செலவும் அடங்கும் என்று சிங்டெல் தெரிவித்து இருக்கிறது.
இந்த மேம்பாட்டுத் திட்டம் 2028ல் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுஉருவாக்கத்திற்கு வசதியாக 2024ல் சிங்டெல் கம்சென்டரை காலி செய்யும். அதன் ஊழியர்கள் இதர சிங்டெல் கட்டடங்களுக்குத் தற்காலிகமாக அனுப்பப்படுவர்.

