சிங்கப்பூரும் இந்தியாவும் உடன்பாடு

சிங்கப்பூரும் இந்தியாவும் உடன்பாடு

2 mins read
686a1e60-95c9-44dc-9823-efff0b09f674
சிங்கப்பூர் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் (வலமிருந்து இடம்), இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பத்திற்கான துணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய அறிவியல், தொழில் நுட்பப் பிரிவின் செயலாளர் எஸ். சந்திரசேகர்(இடம்-கீழ்), சிங்கப் பூர் வர்த்தக, தொழில் அமைச்சின் நிரந்தரச் செயலாளர் லீ சுவான் டெக்(கீழ்-வலம்). படம்: வர்த்தக, தொழில் அமைச்சு -

இவ்­வட்­டா­ரத்­தின் வர்த்­தக மைய­மாக விளங்­கும் சிங்­கப்­பூ­ரும் தொழில்­நுட்ப வளா­க­மான இந்­தி­யா­வும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், புத்­தாக்­கம் ஆகிய மூன்று துறை­களில் தங்­க­ளுக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்பை மேலும் வலுப்­ப­டுத்த ஒப்­பந்­தத்­தில் கை யெழுத்­திட்­டுள்­ளன.

சிங்­கப்­பூ­ரின் வர்த்­தக, தொழில் அைமச்­சும் இந்­திய அறி­வி­யல், தொழில்­நுட்­பப் பிரி­வும் கையெ­ழுத்­திட்­டுள்ள அந்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம், இரு நாடு­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு இடையே அதிக ஒத்­து­ழைப்­புக்­கும் அதிக வாய்ப்­பு­க­ளுக்­கும் வழி வகுக்­கிறது. இதன்­கீழ் இரு நாடு­களும் நவீன பொறி­யி­யல், தயா­ரிப்­புத் துறை, எரி­சக்தி மற்­றும் புதிய தொழில்­நுட்­பத் துறை­களில் கூட்­டுத் திட்­டங்­களை மேற்­கொள்ள முடி­யும்.

மேலும் ஓர் ஒப்­பந்­தத்­தில் இந்­திய அறி­வி­யல் தொழில்­நுட்­பப் பிரி­வும் என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூ­ரும் கையெ­ழுத்­திட்­டுள்­ளன. இது, புதிய புத்­தாக்­கத் தொழில்­நுட்­பத்­தி­லும் தீர்­வு­க­ளி­லும் பங்­கா­ளித்­து­வத்தை மேம்­ப­டுத்தி இரு நாடு­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கிறது.

இந்­திய-சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப மாநாட்­டின் முதல் நாளான நேற்று இரு ஒப்­பந்­தங்­களும் கையெ­ழுத்­தா­கின. இந்த மாநாட்டை இந்­திய அர­சாங்­கம், இந்­திய அறி­வி­யல், தொழில்­நுட்­பப் பிரிவு, சிங்­கப்­பூ­ரின் வர்த்­தக, தொழில் அமைச்சு, இந்­திய தொழில் சம்­மே­ள­னம் ஆகி­யவை இணைந்து நடத்­து­கின்­றன. மெய்­நி­கர் வழி­யாக நடை­பெ­றும் இரண்டு நாள் மாநாட்­டில் விண்­வெளி தொழில்­நுட்­பம், விவேக நக­ரங்­கள், நீடித்த போக்­கு­வ­ரத்­துக்­கான தொழில்­நுட்­பம் போன்ற தலைப்­பு­களில் இரு­நா­டு­க­ளைச் சேர்ந்த நிபு­ணர்­கள் சிறப்­பு­ரை­யாற்­று­கின்­ற­னர்.

நேற்று நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பேசிய வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரான எஸ். ஈஸ்­வ­ரன், இரு நாடு களுக்கு இடை­யி­லான வர்த்­த­கம் 2020ல் 19.8 பில்­லி­யன் டால­ரில் இருந்து 35 விழுக்­காடு கூடி கடந்த ஆண்டு 26.8 பில்­லி­யன் டால­ருக்கு அதி­க­ரித்­துள்­ளதை சுட்­டிக் காட்­டி­னார். கொவிட்-19 நெருக்­க­டி­யி­லி­ருந்து இரு நாடு­களும் மீண்டு வரு­வதை உடன்­பா­டு­கள் காட்­டு­வ­தா­க­வும் அவர் சொன்­னார். மூன்று துறை­களில் இரு நாடு­களும் சேர்ந்து செயல்­ப­ட­லாம் என்­றும் அவர் யோசனை தெரி­வித்­தார்.

செயற்கை நுண்­ண­றிவு, இணை­யச் செயல்­பா­டு­கள், கட்­டு ­மா­னம் மற்­றும் சுற்­றுச்­சூ­ழல் தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் ஆகி­யன அவை.