உக்ரேன் நெருக்கடியால் சிங்கப்பூரர்கள் பாதிக்கப்படலாம்

உக்ரேன் நெருக்கடியால் சிங்கப்பூரர்கள் பாதிக்கப்படலாம்

2 mins read
f3aa7e9e-2c99-464f-a93e-2abbcb210471
-

உக்­ரேன் விவ­கா­ரம் நாளுக்கு நாள் மோச­ம­டைந்து வரு­கிறது. அந்­நாட்­டில் உள்ள இரண்டு வட்­டா­ரங்­களை நாடு­க­ளாக அங்­கீ­க­ரித்­துள்ள ரஷ்யா அங்கு படை­க­ளை­யும் அனுப்­பி­யுள்­ளது. அமெ­ரிக்கா, மேற்­கத்­திய நாடு­கள் தடை விதிக்­கப்­போ­வ­தாக எச்­ச­ரித்­தும் உக்­ரே­னுக்­குள் ரஷ்யா நுழைந்­துள்­ளது.

இதை­ய­டுத்து ரஷ்­யா­வின் தற்­காப்பு, வங்கி மற்­றும் நிதித்­து­றை­க­ளுக்கு மேற்­கத்­திய நாடு­க­கள் தடை விதிக்­க­லாம் என எதிர்­பார்க்­கப் படு­கிறது. உக்­ரேன் நெருக்­க­டி­யால் 2014ஆம் ஆண்­டுக்­குப் பிறகு புதிய உச்­ச­மாக ஒரு பீப்­பாய் கச்சா எண்­ணெ­யின் விலை ேநற்று 100 அமெ­ரிக்க டால­ருக்கு விற்­கப்­பட்­டது. உக்­ரேன் நில­வ­ரம் மேலும் மோச மடைந்­தால் எண்­ணெய் விலை­யும் மோச­ம­டை­யும். இத­னால் விலை­வாசி அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது.

கடந்த செவ்­வாய்க்கிழமை வெளி­யிட்ட அறிக்­கை­யில் உக்­ரேன் விவ­கா­ரத்­தில் சம்­பந்­தப்­பட்ட அனைத்­துத் தரப்­பி­ன­ரும் பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காண வேண்­டும் என்று சிங்­கப்­பூர் வலி­யு­றுத்தி இருந்­தது. இந்த நிலை­யில் சிங்­கப்­பூ­ரர்­களை நான்கு வழி­களில் உக்­ரேன் பிரச்­சினை பாதிக்­க­லாம் என கூறப் படு­கிறது.

உணவு விலை அதி­க­ரிப்பு அவற்­றில் ஒன்று. உக்­ரேன் விவ­கா­ரத்­தால் கோதுமை, சோளம் போன்­ற­வற்­றின் விலை குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­ரிக்­கும் என நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

உக்­ரேன், உல­கின் மூன்­றா­வது பெரிய சோள ஏற்­று­ம­தி­யா­ள­ரா­க­வும் நான்­கா­வது பெரிய கோதுமை ஏற்­று­ம­தி­யா­ள­ரா­க­வும் இருந்து வரு­கிறது. அதே நேரத்­தில் கோது­மையை அதி­கம் இறக்­கு­மதி செய்­யும் நாடாக ரஷ்யா உள்­ளது.

இத­னால் இவ்­வட்­டார உணவு விநி­யோ­கம் பாதிக்­கப்­பட்டு 2021ல் 28 விழுக்­காடு கூடி புதிய உச்­சத்­தைத் தொட்ட உணவு விலை­கள் மேலும் அதி­க­ரிக்­க­லாம். அடுத்­த­தாக மின்­சார விலை­யும் அதி­க­ரிக்­கக்­கூ­டும். உக்­ரேன் வழி­யா­கச் செல்­லும் ரஷ்­யா­வின் எரி­வா­யுவை ஐரோப்­பிய நாடு­கள் பெரி­தும் நம்­பி­யுள்­ளன. இதன் மூலம் ஐரோப்­பா­வுக்கு 40 விழுக்­காடு இயற்கை எரி­வா­யுவை ரஷ்யா விநி­யோ­கித்து வரு­கிறது. இதன் கார­ண­மாக உல­கின் எரி­சக்தி சந்­தை­யும் பாதிக்­கப்­ப­ட­லாம். மின்­சார உற்­பத்­திக்கு இயற்கை எரி­வா­யுைவ நம்­பி­யி­ருக்­கும் சிங்­கப்­பூ­ரும் உல­கச் சந்­தை­யில் எரி­வாயு விலை ஏற்­றத்­தால் பாதிக்­கப்­படும்.

மூன்றாவதாக கச்சா எண்­ணெய் விலை அதி­க­ரிக்­க­லாம். ரஷ்­யா­வின் எண்­ணெய்யை ஏற்­று­ம­திக்கு தடை விதிக்­கப்­பட்­டால் கச்சா எண்­ணெய் விலை மேலும் அதி­க­ரிக்­கும். சவூதி அரே­பி­யா­வுக்கு அடுத்­த­தாக ரஷ்யா அதி­க­ளவு எண்­ணெயை ஏற்­று­மதி செய்து வரு­கிறது. நாளுக்கு ஐந்து பில்­லி­யன் பீப்­பாய் கச்சா எண்­ணெய்யை ரஷ்யா ஏற்­று­மதி செய்­கிறது. இத­னால் உக்­ரேன் விவ­கா­ரம் எண்­ணெய் விலை­யி­லும் எதி­ரொ­லிக்­கும். நான்­கா­வ­தாக விநி­யோ­கச் சங்­கிலி பாதிக்­கப்­பட்டு பொருள் விலை­கள் அதி­க­ரிக்கக்­கூ­டும்.