முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 2வது தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. காலாங்/ வாம்போ முதிர்ச்சி யடைந்த பேட்டைகளில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
நேற்று புதன்கிழமை மாலை நில வரப்படி ஒவ்வொரு நான்கறை வீட்டுக்கும் 16 பேர் விண்ணப்பித்துள்ளனர். இங்கு கட்டப்படும் புதிய வீடுகளில் 95 விழுக்காடு முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை அடிப் படையாக வைத்துப் பார்த்தால் 294 நான்கறை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் முதல் முறையாக வீடு வாங்கு வோர் பத்து பேரும் இரண்டாவது முறையாக வீடு வாங்குவோர் 134 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். கிங் ஜார்ஜஸ் ஹைட்ஸ் முதன்மை வட்டார வீட்டுத்திட்டத்தின் 104 மூவறை வீடுகளுக்கு போட்டி சற்று குறைந்து காணப் படுகிறது.

