‘செய்திகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கின்றனர்’

சிங்­கப்­பூர் வாச­கர்­கள், மற்­ற­வர் களு­டன் ஒப்­பி­டு­கை­யில், தாங்­கள் வாசிக்­கும் செய்­தி­களில் உள்ள தக­வல்­க­ளின் உண்­மைத்­தன்­மை­யைச் சரி­பார்க்­கக் கூடு­தல் நேரம் செல­வி­டு­வ­தாக அண்மை ஆய்வு ஒன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.

கொள்கை ஆய்­வுக் கழ­கம் சிங்­கப்­பூர்க் குடி­யி­ருப்­பா­ளர்­கள் 50 பேரி­டம் அந்த ஆய்வை நடத்­தி­யது.

5ஜி தொழில்­நுட்­பம் பறவை களின் உயி­ருக்கு ஆபத்­தா­னதா என்­பது குறித்த தவ­றான தக­வல்­ க­ளைக் கொண்ட இணை­யக் கட்­டு­ரையை வாசிக்­கும்­படி அவர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

பகுத்­த­றி­யும் பண்­பு­டன் அவர்­கள், எவ்­வாறு அந்­தத் தக­வல்­ களைச் சரி­பார்த்­த­னர் என்­பது ஆய்­வில் கருத்­தில் கொள்­ளப்­பட்­டது. அதி­கா­ர­பூர்வ தளங்­களில் இருந்து பெறும் தக­வ­லுக்­கும், சமூக வட்­டங்­களில் இருந்து கிடைக்­கும் தக­வ­லுக்­கும் இடையே அவர்­கள் எந்த அள­விற்கு வலு­வா­கப் பாகு படுத்­திப் புரிந்­து­கொள்­கின்­ற­னர் என்று ஆரா­யப்­பட்­டது.

தொடர்பு, தக­வல் அமைச்­சின் நிதி­யா­த­ர­வு­டன் அந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது.

தவ­றான தக­வல் யாரை வேண்­டு­மா­னா­லும் சென்­ற­டை­யக்­கூ­டும்; அதற்கு யாரும் விதி­வி­லக்­கல்ல என்­ப­தைச் சிங்­கப்­பூ­ரர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்; இருப்­பி­னும், பொய்ச் செய்­தி­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்­தில் அனை­வ­ருக்­கும் பங்­குண்டு என்­பதை ஆய்­வா­ளர்­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.

'ஸ்னோப்ஸ்' போன்ற தக­வல்-சரி­பார்ப்பு இணை­யத்­த­ளங்­கள் குறித்த விழிப்­பு­ணர்வை அதி­க­ரித்­தல், சமூக வட்­டங்­களில் பர­வும் பொய்ச் செய்­தி­க­ளைத் திருத்­து­வ­தற்­கு­ரிய திறன்­க­ளைப் பொது­மக்­க­ளுக்­குக் கற்­பித்­தல் உள்­ளிட்ட சில பரிந்­து­ரை­க­ளை­யும் அவர்­கள் முன்­வைத்­துள்­ள­னர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!