பயோனிக்ஸ் விபத்தில் கொல்லப்பபட்ட தேசிய சேவையாளர்: ஆயுதப்படை அதிகாரிக்கு 5 மாதம் சிறை

பயோனிக்ஸ் விபத்தில் கொல்லப்பபட்ட தேசிய சேவையாளர்: ஆயுதப்படை அதிகாரிக்கு 5 மாதம் சிறை

1 mins read
c2bdcd9c-e8c4-4ef2-bcbf-fb62df42bcd9
ஒங் லின் ஜியே -

முழுநேர தேசிய சேவையாளர் லியூ காயின் மரணத்தை விளைவித்ததன்பேரில் சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த அதிகாரிக்கு ஐந்து மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நிகழ்ந்த பயிற்சியின்போது நேர்ந்த அந்த மரணத்தின் தொடர்பில், தற்போது 30 வயது ஆகும் கேப்டன் ஓங் லின் ஜியே மீது முன்யோசனையின்றி செயல்பட்டு ஒருவரது மரணத்தை விளைவித்ததற்காக அந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் நிகழ்ந்த போது வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தை மாற்ற வேண்டும் என்பதே ஓங்கின் நோக்கமாக இருந்தது என்று சுட்டிய நீதிபதி ஜஸ்வேந்தர் கோர் "இந்த தண்டை முன்யோசனையின்றி செயலை நியாயப்படுத்தாது," என்று தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் கூறினார்.

சம்பவம் நிகழ்ந்தபோது 22 வயதான லியூ, சிங்கப்பூர் ஆயுதப்படையின் மேற்கு போக்குவரத்து மையத்தில் பணிபுரிந்தார். 'பயோனிக்ஸ் இன்ஃபண்ட்ரீ' கவச வாகனம் பின்னால் நகர்ந்து லேண்ட் ரோவரை ஓட்டிக்கொண்டிருந்த முதலாம் நிலை கார்ப்பரல்(சிஎஃபசி) லியூவை மோதி அவரது உயிரைப் பறித்தது.