கடல்வழி 'விடிஎல்' திட்டத்தின் வழி, 28 சிங்கப்பூரர்கள் பாத்தாம் தீவைச் சென்றடைந்ததுள்ளனர்.
ஈராண்டுகளுக்குப் பிறகு, பாத்தாம் தீவைச் சென்றடைந்த முதல் அனைத்துலகப் பயணிகள் இவர்கள்.
பயணிகளை வரவேற்ற ரியாவ் தீவுகளின் ஆளுநர், இந்தத் தருணத்திற்காக வெகுநாளாகக் காத்திருந்ததாகக் கூறினார்.
திட்டத்தின் கீழ் முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக்கொண்ட சிங்கப்பூர்ப் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையின்றி பாத்தாமுக்கும் பிந்தானுக்கும் சென்றுவரலாம்.