இவ்வாண்டு 900 குறுந்தகவல் மோசடிச் சம்பவங்கள்

இவ்வாண்டு 900 குறுந்தகவல் மோசடிச் சம்பவங்கள்

1 mins read
0ed06e90-791f-4785-9ef7-f440c69ea55b
சிங்கப்பூர் காவல் துறை அதிகாரிகள் போன்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு மோசடிக்காரர்கள் ஏமாற்றம் செய்வார்கள் (படம்: சிங்கப்பூர் காவல் துறை) -
multi-img1 of 3

இவ்வாண்டு இதுவரை குறுந்தகவல்களின் மூலம் ஏமாற்றிப் பணம் பறிக்கும் குறைந்தது 900 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், காவல்துறையினரைப் போல் நடித்து ஏமாற்றுக்காரர்கள் மேற்கொள்ளும் மோசடிச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்குவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இத்தகைய மோசடிச் சம்பவங்களில் குறிவைக்கப்படுவோருக்கு வாட்ஸ்ஆப் போன்ற குறுந்தகவல் செயலிகளின் மூலம் தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் வரும் என்று காவல்துறை கூறியது.

அத்துடன், இத்தகைய ஏமாற்றுக்காரர்கள் பொதுவாக மோசடி செய்ய பயன்படுத்தும் செயலிகளில் தங்களின் அடையாளப் படமாக சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகளின் படங்களை வைத்திருப்பர்.

இவ்வாறு அழைத்து ஏமாற்றுக்காரர்கள் தாங்கள் குறிவைப்போரின் தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்குத் தகவல்கள் போன்றவற்றைக் கேட்பதுண்டு.

அதற்குப் பிறகு ஏமாற்றுக்காரர்கள் 'டிபிஎஸ் பேலா' போன்ற செயலிகளின் மூலம் மின்பணப்பையை உருவாக்கி அதில் ஏமாற்றப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து நிரப்புவர்.

தொலைபேசி அழைப்பின் மூலம் அரசாங்க அமைப்புகள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கமாட்டா என்பது வலியுறுத்தப்பட்டது.